பக்கம்:விடிவெள்ளி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 9 181 இன்னும் அவர் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் எப்படி பும் கண்டுபிடித்து விடுவார். உண்மையைக் கண்டு கொண்ட பிறகு அவர் என்ன செய்வாரோ எனக்கு பய மாக இருக்கிறது. என்று அமுதவல்லி சொன்னான். பயத் தினால் அவள் உடல் கூட நடுங்கியது. மங்கையர்க்கரசி பரிவுடன் அவள் தோளில் கை வைத்தாள். அன்போ டு அவள் தலையை வருடினாள். அவள் முகத்தையே கவனித்தபடி வசீசரமாகப் புன்னகை பூத்தாள். நான் ஒன்று கேட்டேன். நீ ஒளிக்காமல் விடை அளிக்க வேண்டும், ஊம் சரிய:?' என் நாள், பேசாது, தலையை அசைத்தாள் அமுதம் இளம்வழுதியை முன்பே உனக்குத் தெரியுமா? "மதுரை நகரில் தான் அவரை நான் சந்தித்தேன். அவர் எனக்கு இரண்டு தடவைகள் உதவி செய்திருக் கிறார். ஆற்றோடு போய்விடுவதற்கிருந்த என் குடத்தைப் பிடித்து எடுத்து என்னிடம் தந்தார்.' - அத்துடன் உன் உள்ளத்திலும் இடம் பிடித்து விட்டாராக்கும்? என்று சிரிப்புடன் கேட்டாள் மங்கை, அமுதவல்லியின் முகம் உணர்வுப் பெருக்கால் குழம்பித் தாழ்ந்ததைக் கண்டு ரசித்து மகிழ்த்தான். பிறகு எனக்குத் தீமை செய்யத் துணிந்த களப்பிர வெறியர்களிடமிருந்து என்னை அவர் காப்பாற்றினார். அதற்கொல்லாம் நன்றி அறிவிக்கும் முறையில்தான் நீவழுதியைக் காப்பாற்றினாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்' என்று கூறிச் சிரித்தாள் மங்கையர்க் கரசி, - - அமுதவல்லியை மீண்டும் நாணம் பற்றிக் கொண்டது உளம் எல்லாம் திறைந்த மகிழ்வினால் அவள் முகம் 12 سن-a3:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/182&oldid=906015" இலிருந்து மீள்விக்கப்பட்டது