பக்கம்:விடிவெள்ளி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 விடிவெள்ளி 10. ஒளி உதயம் கிளப்பிரர்கள் கடுமையான எதிர்ப்பு திடுமென வந்து தாக்கும் என்று கனவிலும் கருதியவரல்லர். சில நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்து, தங்கள் நச்சுச் செயல் களுக்கு அழுத்தமான அடித்தலம் அமைத்து விட்டதாக நம்பியிருந்தார்கள். ஆட்சி வெறியும், குடி வெறியும், கயமைக் குணங்களும் அவர்களை மந்த புத்தியினராகவும் குருடர்களாவும் மாற்றிவிட்டன. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் தன்மையோ, மக்களின் உணர்வு மாறுதலைப் புரிந்து கொள்ளும் திறமையோ, வருவதை முன்னதாக அறியக்கூடிய ஆற்றலோ அவர் களி.ம் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்திருக்கக் கூடிய சத்திகளை அகந்தையும் மமதையும் அழித்துவிட்டன. அவர்கள் தயவை எதிர்பார்த்து, அவர்களைச் சுற் நிக் கூடியிருந்த இச்சகம் பேசிகளும் புகழ் பாடிகளும் நாட்டினரின் உணர்ச்சி பற்றியும், இதயக் குமுறல் பற்றி யும் தவறான எண்ணங்களையே அவர்கள் காதுகளில் ஒதி வந்தனர். எனவே, மதுரையில் களப்பிரர்களின் பிரதி நிதியாக வீற்றிருந்த கூற்றன் நாயனார் பகைவரின் எதிர்ப்பு பற்றி எண்ணியதே கிடையாது. அப்புறமல்லவா எதிரிகள் வந்தால் போரிட்டுத் தடுப்பதற்குத்தேவையான திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும்! х ஆங்காங்கே சிறு சிறு கிளர்ச்சிகள் தலை எடுப்பதாக வரகுணத்தேவர் மூலம் கேள்விப்பட்ட நாயனார் வீரர் களை நாலா திக்குகளிலும் அனுப்பி வைத்தான். மதுரை நகரத்தில் களப்பிர வீரர்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களும் குடித்துவிட்டுக் கூத்தடிப்பதில் சூரர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/191&oldid=906034" இலிருந்து மீள்விக்கப்பட்டது