பக்கம்:விடிவெள்ளி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 விடிவெள்ளி 'இவனை நாம் எதுவும் செய்ய வேண்டாம். இளம் வழுதியிடமே சேர்த்துவிடுவோம்' என்று சிலர் சொன் ைர்கள். வண்டி திசை திருப்பப்பட்டது. முன்னும் பின்னும், இரு புறங்களிலும் பாண்டிய வீரர்கள் உற்சாகமாகக் கூச்சவிட்டுக் கொண்டு அதை இட்டுக் சென்றனர். பூந் திரைகள் ஊசளிட்டுத் தொங்கியவாறே கிடந்தன. இளம்வழுதியும் சாத்தன் கணபதியும் இருந்த இடம் வத்து சேர்ந்தது வண்டி துரோகியைப்பிடித்துவிட்டோம் புல்லுருவி அகப்பட்டுக் கொண்டான்' என்ற கூச்சல்கள் ஒலித்தன. வழுதி ஒரு பக்கத்துத் திரையைப் பற்றி இழுத்தான் திகைத்தான். திடுக்கிட்டான். உள்ளே வரகுணத்தேவர் இருந்தார், அவர் கண்கள் அவன் கண்களைப் பார்த்தன. ஆனால் அவற்றிலே ஒளி இல்லை. அவர் முகம் வெளிறிக் காணப்பட்டது. ஆயினும் அங்கு உணர்ச்சி மாற்றங்கள் ஊடாடவில்லைதேவரின் உடல் ஆடாமல் அசையாமல் இருந்தது. அதை இயக்கும் உயிர் ஒடி மறைந்துவிட்டது: - உண்மையை உணர்ந்து வழுதி எண்ணினான் பயமும் அதிர்ச்சியும் அவருக்கு மரணத்தை அளித்திருக்கும் என்று, அவன் விழிகள் திலகவதியின் முகத்தில் பாய்ந்தன. அவனையே பார்த்தபடியிருந்த கருவிழிகளைச் சந்தித்தன. அவன் வாய் திறப்பதற்கு முன்னதாகவே திலகவதி சிறு முறுவல் பூத்தாள். நீங்கள் என்னை மறந்து விட்டீர் கள் இல்லையா? என்று மென் குரலில் கேட்டாள் 'எனக்கு உயிர்ப்பிச்சை அளித்த அன்னையை நான் மறக்க முடியுமா? இதை நான் முன்பே உங்களிடம் சொன்னேனே! என்றான் லழுதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/193&oldid=906038" இலிருந்து மீள்விக்கப்பட்டது