பக்கம்:விடிவெள்ளி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் இ 45 என்ன பேரப்பிள்ளே, உமக்கு இன்னும் வயிறு பசிக்கவியா? சும்ம்ா உட்கார்ந்துட்டீரே என்று ஆச்சி கேட்டாள். - என் சாப்பாட்டுக்கு என்ன அவசரம்? நீ உன் வியா பாரத்தைக் கவனி ஆச்சு என்று அவன் கூறினான். "இன்னிக்கு என்ன அதிசயமோ! பேரப்பிள்ளை அதி காலையிலேயே குளிச்சி முழுகி வந்திருக்காரு' என்று சொல்விச் சிரித்தாள் அவள். ஆற்றங்கரைப் பக்கமாப் போனேன். ஆண்ணிக் அருமையாக ஓடுகிறது. ஆசையாக இருந்தது குளித்தேன். இதிலென்ன அதிசயம் இருக்குது ஆச்சி? என்றான் இளம்

முேதி.

'ஊம்' என்று இழுத்தாள் ஆச்சி. இந்தாரும், ஆப்ப மும் பட்டும் சாப்பிடும். நீரு குளிச்சிட்டு வந்திருக்கிற துக்கும், குளிருக்கும், பசிக்கும் இது இதமாக இருக்கும் என்று சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அவன். நி அவள் அன்புடன் அளித்ததை அவன் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வீதி மூலையில் மேகம் போல் புழுதி கிளம்பியது. வேகமாக வரும் குதிரை வண்டிதான் அப்படித் துளசி எழுப்பியது என்பதை அவன் புரிந்துகோள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை. பிடுக்காக நடைபோடும் இரண்டு குதிரைகள் பூட்டி அழகான வண்டி அது அதனுள் யார் இருக்கிறார்க என்று தெரியாத வண்ணம் மூடியிருந்த மெல்லிய துணி திரைகள் வண்டிக்கு அதிகமான கவர்ச்சி தந்தன அ வண்டியும் குதிரைகளும் பூங்குடி ஆச்சியைச் சுற்றி நின்ற சிறுவர் சிறுமிகளின் கவனத்தை மட்டுமல்லாமல், இனம் வழுதியின் கண்களையும் தம்பால் ஈர்த்தன. அந்த வண்டி’ ஆச்சியின் கடைக்கு முன்னால் வந்து நிற்கவும் அனைவரது வியப்பும் அதிகமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/46&oldid=906103" இலிருந்து மீள்விக்கப்பட்டது