பக்கம்:விடிவெள்ளி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் E 89 முதலில் தெளிவற்றுக் குழம்பிய ஒலி அலைகளாக மிதந்து வந்த ஒசை சிறிது சிறிதாகப் புலனாகியது பலப் பல குதிரைகள் வேகமாக அடிபெயர்ந்து முன்னேறுவ தாக உணர்ந்தான் அவன். அவனுடைய அறிவின் குர லுக்குக் கீழ்படிந்து இளம்வழுதி பாதையைவிட்டு விலகி மரங்கள் நின்ற ஒரு பகுதியில் புகுத்து மறைவாக நின்றான். - தரையிலிருந்து பொங்கியெழும் புழுதி மேகப்படலம் போல் கவிய, அதை ஊடுருவியவாறு குதிரைகள் பாய்ந்தன. தேர்ந்தெடுத்த மிடுக்கான குதிரைகள் மீது எடுப்பாக வீற்றிருந்த வீரர்கள் களப்பிரர்கள் தான் என்பதை எவரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இளம்வழுதிக்கு முதலிலேயே அது விளங்கிவிட்டது. ஆனால் இவ்வளவு அதிகாலையில் அவர்கள் எங்கே கிளம்பிவிட்டார்கள்?’ என்பதை விளக்குவதற்கு யாரு மில்லையே என வருந்தினான் அவன் சாத்தன் கணபதியைக் கண்டு பேசி, ஏதாவது ஆலோ சனை செய்யலாம் எனும் எண்ணத்தோடு அவன் வேக மாக நடந்தான் பூங்குடி ஆச்சியின் இருப்பிடம் சேர்ந்த போது அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கு அவனது நண்பன் இல்லை. அவன் எங்கே போயிருக் கிறான், எப்பொழுது திரும்பி வருவான் என்று தன்னிடம் சொல்லவில்லை-தனக்குத் தெரியவும் தெரியாது’ என்று மீனாட்சி ஆச்சி அறிவித்தாள் அடுத்து அவனுக்கு மாமூலனாரின் நினைவு தான் வந்தது. அவரைக் காண்பதற்காக இளம்வழுதி சென் நான். வழி நெடுகிலும் பரபரப்பு மிகுந்திருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. இரண்டு மூன்று பேராக நின்று ஜனங்கள் கூடிப்பேசுவதும், சந்தேகம் எழுப்பக் கூடியவர்களைக் காணும்போது தத்தம் அலுவல்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/90&oldid=906200" இலிருந்து மீள்விக்கப்பட்டது