பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

391. ஐந்து பேரில் இளையவன்,
        கலியாணத்திற்கு மூத்தவன்.

392. சுருக்கென்று குத்தும் முள்,
        பொறுக்க முடியாது.

393. தீப்பொறி பறக்கும்; எரியாது.
        கையிலே பிடித்தால் சுடாத

394. அஞ்சு காசுக்குச் சரக்கு வாங்கி,
        இரண்டு வண்டியில் ஏற்றினேன்.
        இன்னும் மீதி இருக்குது - அது என்ன?

395. மூன்று பெண்கள் ஒரே முகம்.
        மூத்த பெண் ஆற்றிலே;
        நடுப் பெண் காட்டிலே;
        கடைசிப் பெண் வீட்டிலே.

396. வாசலில் வந்து நின்றவரை
        வரவேற்க ஆளில்லை.

397. அண்ணன் வீட்டுத் தோட்டத்திலே,
        பச்சைப் பாய் விரித்திருக்கிறது.

398. கட்டுப்பட்டு இருந்த மகளை ,
        விட்டுப் பிரிந்து வந்தாள்.

399. பளபளவென்று பட்டுடுத்திப்
        பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்
        தெருவைச் சுற்றி வருகிற பெண்
        திரும்பிப் பார்க்க மாட்டாளாம்.

400. ஓகோ மரத்திலே,
        உச்சாணிக் கிளையிலே,
        ஒட்டுச் சட்டியிலே
        களிமண் இருக்கிறது.

401. யானை படுக்க இடமுண்டு;
        கடுகு மடிக்க இலையில்லை.

402. கையில்லாமல் நீந்துவான்;
        கால் இல்லாமல் ஒடுவான்.