பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

95

எனக்கு எவ்வித விபரமும் தெரியாத வகையில் அவரே நிர்வாகத்தை நடத்தி வந்தார். குறிப்பாகச் சொல்லப்போனால் நான் அவர்களது கைதிபோல் இருந்தேன். கி.பி. 1790-ல் முத்திருளப்ப பிள்ளை எனது அனுமதியை எதிர்பார்க்காமல், மேக்லாய்டு துரையிடமிருந்து மதுரைச் சீமையை குத்தகைக்குப் பெற்று மதுரைக்குச் சென்றுவிட்டார். வெறுப்படைந்த குடிமக்கள், அவர் சென்ற பல்லக்கை நொறுக்கி அவரது பணியாட்கள் இருவரைக் கொன்று அவரையும் மிக மோசமாக அவமானப்படுத்தினர். இந்த விபரம் தளபதிக்கும் மற்றவர்களுக்கும் பிறகு தான் தெரியவந்தது. எனது பணியாளர்களை அனுப்பி அவரிடத்திலிருந்த முத்திரை மோதிரத்தைப் பெற்றுவரச் செய்தேன். மதுரையிலிருந்த அவரை மார்ட்டின்ஸ் வரவழைத்து தமது சொந்தப் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். சாமித்தேவனை சென்னைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி சர்க்காரிடம் எனக்கு எதிராக புகார் மனுக் கொடுக்கச் செய்தார். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருக்குமாறு குடிமக்கள் சிலரையும் தூண்டி விட்டார்...

நான் இப்பொழுது அனுபவிக்கும் சிறை வாழ்க்கைக்கான காரணங்கள் தங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. எனது குடும்பத்திலிருந்து என்னைப் பிரித்து, இங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது அறையின் முகப்பில் பரங்கி வீரர்களும் சுதேசிச் சிப்பாய்களும் காவலுக்குப் போடப்பட்டுள்ளனர். இறைவழிபாடு செய்ய இயலாதவாறு அந்த வீரர்கள் பூஜை நேரத்தில் கூட, என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நாட்டு சமயத்தையும் சம்பிரதாயங்களையும் பற்றி ஒழுகும் எனக்கு, வழிபாட்டின் பொழுதும், உணவு நேரத்தின் பொழுதும் பணியாளர் பலரது பணி தேவைப்படுகிறது. ஆனால் என்னைக் கவனிப்பதற்கு இப்பொழுது ஒரே ஒரு பணியாள் மட்டும் உள்ளான். இது எனக்கு மிகுந்த இடர்ப்பாட்டினை தருவதாக உள்ளது. நான் இருக்கும் வீடு இரவு நேரத்தில் பூட்டப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வழக்கமாக இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு நான் உணவு உட்கொள்ள முடியாமல் தடுக்கப் பட்டு விட்டேன்.

எவ்வித-விசாரணையுமில்லாமல், எந்தக் குற்றச்சாட்டுமில்லாமல், இவ்விதம் கொடுரமாக நடத்தப்படுவதைத் தங்க