பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

எஸ். எம். கமால்

யாக சொந்த உபயோகத்துக்கு வாங்கி வந்த தானியப் பொதிகளை பறிமுதல் செய்தனர். அல்லது அவைகளுக்கு மிகுந்த வரி விதித்தனர்.[1]

மற்றும் சில வியாபாரிகள் தஞ்சை, புதுவை, இலங்கை போன்ற கடற்கரைப் பகுதியிலிருந்து தோணிகள் மூலம் மறவர் சீமைக்குள் தானியங்களை இறக்குமதி செய்வதை கும்பெனிக் கலெக்டர்கள் பவுனியும், ஜாக்சனும் தடுத்தனர். பரங்கியரது சேமிப்புக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக இருப்பில் இருந்து உளுத்துப்போன தானியங்களுக்கு கிராக்கியும், கூடுதல் விலையும் கிடைப்பதற்காக.[2] அத்துடன் விவசாயத் தொழிலுக்கு மூலதனமான காளை மாடுகள் அனைத்தையும் கைப்பற்றி மைசூர்ப்போரில் பாரவண்டிகள் இழுவைக்காக அனுப்பினர்.[3] மழை பெய்தால் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தனர்.

இங்ங்னம் மறவர் சீமையின் கிராமப் பொருளாதாரத்தை

அழித்து, வளமையாகப் பின்பற்றப்பட்ட மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் ஒழித்து, மேனாட்டு தண்டனை அடிப்படையிலான சமூக நியதிகளை நிறுவ முயன்றனர். இத்தகைய செயல்களை ஏற்கெனவே கும்பெனித் தளபதி புல்லர்ட்டன் கடுமையாக விமர்சித்திருந்தபொழுதும்[4] அந்தக் கொள்கையை மாற்றம் இல்லாமல் அப்படியே கடைப்பிடித்து வந்தனர். அதனால் விளையும் எத்தகைய பிரதிபலிப்புகளையும் சமாளித்துவிடலா மென்பது அவர்களது தீர்க்கமான முடிவாக இருந்து வந்தது. பஞ்சத்தாலும் பசியாலும் பரிதவித்துக் கொண்டிருந்த மக்கள் கும்பெனியாருக்கு எதிரான மனிதாபிமான உணர்வுகளால் உந்தப்பட்டு எழுச்சிபெறும் நிலை அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்தது.


  1. Military Consultations, Vol. 256, 6–8-1799, p. 478 | -88
  2. Board of Revenue Proceedings, Vol. 192 D, 26-1-1798 р. 505. Revenue Despatches to England, Vol. v D, 15-10-1798, pp. 300-302.
  3. Military Con sultations, VoI. 251, 27–3–1799, p. 1445
  4. Military Sundries, Vol. 66 D, 13-8-1784, pp. 241-250