உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3
சேதுபதி இல்லாத சீமையிலே

மறவர் சீமையின் முதல் குடிமகனான சேதுபதிக்கே அந்த மண்ணிலே உரிமை இல்லாது போயிற்று. ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்த மண்ணின் ஆதிக்கத்தை, அரசை, நிர்வாகத்தை ஆட்சிபீடத்தை அலங்கரித்தவர்களை, புனித சேதுவின் பாதுகாவலர் எனப் போற்றப்பட்டவர்களை ஆற்காட்டு நவாப் அவரது நாட்டினின்றும் அகற்றி விட்டார். அவர்கள் வழியினருக்கு அவர்கள் நாட்டில் வாழ்வதற்குக் கூட உரிமையில்லையே என மறக்குல மக்கள் பொருமி நைந்தனர். அந்த நிலையில் அதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஆட்சிமுறைக்கு மாறாக நவாப், பல மாற்றங்களைப் புகுத்தினார். இராமநாதபுரம் கோட்டை 'அலிநகர்' என அரசுப் பதிவுகளில் குறிக்கப் பெற்றது. ஆட்சி மொழியாக பாரசீக மொழி புகுத்தப்பட்டது தலைமுறை தலைமுறையாக முற்றுட்டாகவும், இறையிலியாகவும், சர்வ மான்யமாகவும், சீவிதமாகவும் சேது மன்னர்களால் வழங்கப்பெற்று, குடிகளால் அனுபவித்து வரப்பெற்ற கொடைக்காணிகள் புதிய நிர்வாகத்தினரால் பறிக்கப்பட்டு புதிய அரசின் அடிவருடிகளுக்கு கவுல் காணியாக வழங்கப்பட்டன.[1]

நிர்வாகத் தலைவர் அமுல்தார் என வழங்கப்பட்டார். அவரது வசூல் நடவடிக்கைகளில் உதவுவதற்காக அமீன், தாசில்தார், சதர் என வழங்கப்பட்ட புதிய அலுவலர்கள் பொறுப்பு ஏற்றனர். அவர்கள் மறவர் சீமை மக்களிடம் எவ்வித நியதிமின்றி கெடுபிடி வசூலை மேற்கொண்டனர்.[2] மகசூல்


  1. Mily. Cons., Vol. 143 (1772), p. 1033.
  2. Rajayyan, Dr. K., History of Madurai (1974) р. 2.66.