பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எஸ். எம். கமால்

யில் தங்கி விட்டதை ஒட்டிச் செல்வதற்காக, இராமநாதபுரம் சீமைச் சேவகர்கள் இருபதுக்கும் அதிகமானவர்களை அழைத்துவந்து, தம்முடைய மாடுகளுடன் எனைய குடிகளது மாடுகளையும் ஒட்டிக்கொண்டு போய்விட்டனர். இந்த விவரத்தை சீமை, சீமையில் உள்ள திருவாடனை அமில்தாருக்கு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கான முகாந்திரத்தைத் தெரிவிக்குமாறு சிவகங்கைப் பிரதானி ஒரு சேவகர் மூலம் கடிதம் அனுப்பினார். இது சம்பந்தமாக இராமநாதபுரம் அரசைக் கேட்டு பதில் கொடுப்பதாகவும் அதுவரை அவரை திருவாடனையில் தாமதிக்குமாறும் சொல்லப்பட்டது. அவ்விதமே மூன்றாவது நாள் இராமநாதபுரத்தில் இருந்து வந்த சேவகர், சிவகங்கை சேவகரைப் பிடித்து இருத்தி அவரது தலையில் ஒரு பகுதியை சிரைத்து, அவரை ஒரு கழுதை மேல் அமர்த்தி, பிணைத்து சிவகங்கை சேர்வைக்காரரது கடிதத்தையும் கழுதையின் கழுத்தில் தொங்கவிட்டு, கழுதைக்கும் சேவகருக்கும் உதை கொடுத்து சிவகங்கை சீமைப் பகுதிக்குள் துரத்தி விட்டனர்.


எல்லையிலே நிகழ்ந்த இத்தகைய தொல்லைகளினால், பகைமை மிஞ்சிய பழி உணர்வுடன், தமது போர் வீரர்களை சிவகங்கைச் சீமைப் பகுதிக்குள் புகுந்து, கொள்ளையும், கொலையும் மேற்கொள்ளுமாறு மன்னர் உத்தரவிட்டார். அவரது அணியொன்று எல்லையிலுள்ள விசுவனுர் சென்று அடைந்த பொழுது சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தமது போர்வீரர்களை ஆனந்துருக்கு அனுப்பி இராமனாதபுரம் அணியை தடுத்து நிறுத்த ஆணையிட்டனர். இரண்டு கல் தொலைவு இடைவெளியில், இரு தரப்பினரும் எதிர் எதிராக இருந்து ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடினர். பல நாட்கள் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.[1] வேறு சில பகுதிகளிலும் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டன. இராமநாதபுரம் மன்னருக்கு ஆதரவாக இருந்த மேலூர் கள்ளர்களும், சிவகங்கைச் சீமையின் மேற்குப் பகுதியில் புகுந்து தங்கள் கைவரிசைகளைக் காண்பித்தனர். திருப்புவனம் சீமையைக் கொள்ளையிட்டு 258 பேர்களைக் கொன்றனர். 2, 000 கலம் நெல்லையும், 17,000 மாடுகளையும், 10,000


  1. Military Country Correspondence, Vol. 45, (1794AD) pp. 177-78