பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
67
 

தார். மேலும், 1793 மார்ச்சில் நாகூர் கமர்ஷியல் ரெஸிடெண்டுக்கு எழுதப்பட்ட மடலில் 'மன்னரது முழு ஒத்துழைப்புடன்[1] தங்களது திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கும்பெனியார் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்களது பேராசையின் பிரதி ரூபம் விரைவில் வெளிப்பட்டு விட்டது. ஒரு அறிவிப்பு வடிவில் வரையப் பெற்ற நகல் ஒன்றை 15-3-1793-ல் பேண் குஷ் கலெக்டர் ஜேம்ஸ் லாண்டன் சேதுபதி மன்னரிடம் காண்பித்து அதற்கான ஒப்புதலைக் கோரினார்.[2]


அந்த அறிவிப்பின்படி, மறவர் சீமையில் உள்ள அத்தனை தறியாளர்களும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மட்டும் துணிகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த சில்லறை அல்லது மொத்த வியாபாரியிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் கூடாது.


தறிக்காரரிடம் எவ்வித வரியும் தறிக்கென வசூலிக்கப்பட மாட்டாது. அவர்களது குடியிருப்புக்களுக்கும். அல்லது விற்பனை செய்யும் துணிக்கும் எவ்வித வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் கோயில்களுக்கு மகமையோ பிராமணர்களுக்கு எவ்விதத் தர்மமோ கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.


கும்பெனியார், நெசவாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களது உடமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவர்.


இராமநாதபுரம் சீமை நெசவாளர் உபயோகத்துக்கென பக்கத்து மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் பஞ்சு அல்லது நூலுக்கு எவ்வித சுங்கமும் வசூலிக்கப்பட மாட்டாது.


இதைப் போன்று மறவர் சீமைக்குள் கொண்டு வரப்படுகிற அல்லது வேறு மாவட்டங்களுக்கு கும்பெனியாரால் வற்றுமதி செய்யப்படுகிற துணிக்கு, சாலைகளிலும், படகுத் துறைகளிலும், சுங்கம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.


  1. Guide to the Records, Tanjore District, Vol. No. 3345, 27-2-1793
  2. Revenue Consultations, Vol. 50 A. (1793), pp. 539-56