பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
83
 

இந்தச் சூழ்நிலையில், மக்களது முகத்தில் துக்கக் கலக்கத்துடன் குழப்பமும் வியப்பும் கலந்து பிரதிபலித்தன. இராமநாதபுரம் கோட்டையின் பொறுப்பு கி.பி. 1772 முதல் கும்பெனித் தளபதி மார்ட்டின்ஸ் பொறுப்பிலிருந்ததால் கும்பெனியாரது படைஅணி கோட்டைக்குள் நுழைவதில் எவ்விதத் தடங்கலும் இல்லாது போயிற்று. கோட்டைத் தளபதி மார்ட்டின்ஸ்-சடன் படை அணிகளின் தளபதி ஸ்டீவன்சனும் அரண்மனைக்குள் சென்றனர். இராமநாதபுரத்திலிருந்து ஸ்டீவன்சன் சென்னைக் கோட்டைக்கு அனுப்பிய மடலில், ...திருநெல்வேலியிலிருந்து 5.ம் தேதி புறப்பட்டேன். தளபதி பெளவேடிர் தமது அணியுடன் கயத்தாற்றில் என்னுடன் சேர்ந்து கொண்டார். விரைவான பயணத்தை மேற்கொண்டு இன்று (8-2-1795) இங்கு வந்து சேர்ந்தோம். தளபதி மார்ட்டின்ஸின் வீரர்கள் எங்களை கோட்டைக்குள் அனுமதித்தனர். தளபதி பெளவேடிரின் அணி, அரண்மனையைக் கைப்பற்றியது. சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு எங்களிடம் சச்சரவிட்ட மன்னர் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டார். நாளை அல்லது மறுநாள் கலெக்டர் பவுனி இங்கு வந்து சேர்ந்ததும், பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்... எனத் தெரிவித்திருந்தார்.


இராமநாதபுரம் கோட்டைக்கு வந்த கலெக்டர் பவுனி சென்னை கவர்னருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் முதல்நாள் இரவு, அரசருக்கு எதிராக படைகள் வந்து கொண்டிருப்பது பற்றிய தகவல் அவருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. அதனால் தப்பிச் செல்வதற்கான எல்லா முயற்சி களையும் அவர் செய்திருந்தார். ஆனால் நமது துருப்புக்களின் அசாதாரண முயற்சியினால் ஆச்சரியப்படும் வகையில் அவரை சிக்கவைத்து விட்டனர். இன்று காலையில் தளபதி பெளவேடிர் பொறுப்பில் அவரை மேலுருக்கு அனுப்பி வைத்துள்ளேன். திருச்சிக் கோட்டைத் தளபதி அங்கு வந்தால் அவரிடம் மன்னரை ஒப்படைக்கும் படியும் இல்லையெனில் நேரே திருச்சிக்குச் சென்று ஒப்படைத்துவிட்டு வருமாறும் அறிவுறுத்தி இருக்கிறேன். இங்குள்ள படைகளை ஏற்கனவே திட்டமிட்டபடி இப்பொழுதைக்குச் சிவகங்கை அனுப்பவில்லை.[1] நமது நட


  1. Military consultations, Vol. A, 8-2-1795, pp. 322-23