உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழைப்பு

9


தேய்ந்து வருகிறது திராவிடம் !தெருவெலாம் வறுமை தாண்டவமாடுகிறது !
கடல் கடந்த நாடுகளிலே எல்லாம்திராவிடர்
கூலிகளாயினர் !

திராவிடத்தின் இந்நாள் நிலையினை எண்ணிடுவோர், ஒரு பெரும் விடுதலைப் போர் நடத்தியே தீரவேண்டும், என்ற முடிவுக்கு வந்தேதீருவர்.

ஒரு வஞ்சக ஏகாதிபத்தியம் இன்று திராவிடத்தைக் கொஞ்சிக் குலவி சொக்க வைக்கிறது—சேல் விழியும் பாதிமதியும்கொண்ட மங்கை நல்லாளை செல்வச் செருக்கும் வஞ்சக நினைப்பும் கொண்ட காமுகன், கனிமொழி பேசி ஏய்ப்பது போல.

பொருளாதாரபலமும், பிரசாரவசதியும், ஆயுத பலமும், அந்தணரின் ஆசீர்வாதபலமும், அமோகமாகக் கொண்டுள்ள வடநாட்டு ஏகாதிபத்தியத் தொடர்பை அறுத்துக்கொண்டு, முப்புறம் கடலும், எப்புறமும் வளமும், அதனைப் பயன்படுத்தும் நாலரைக் கோடி மக்களும் கொண்ட திராவிடம் தன்னாட்சி பெற்றாக வேண்டும்.—அதுவே விடுதலைப் போரின் குறிக்கோள்!

இந்நூல் உங்கள் பார்வைக்கு மட்டுமல்--- மாற்றுக் கட்சிக் காரரின் பார்வைக்கும் கூட.

சி.என்.அண்ணாதுரை