பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

விடுதலை வீரர்கள் ஐவர்

அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசம் - அடைத்த
கடைவுடைத்துக் கொண்டிருந்த வேளை
தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் - அடிமைத்
தடைவுடைத்துக் கொண்டிருந்த நாட்கள்

உடலெல்லாம் துடிக்கின்றபோது- அதிலே
ஓரங்கம் தூங்குவது முண்டோ ?
தடைவிலங்கு பாரதத்துக் கென்றால் - அதனைத்
தமிழகந்தான் தாங்குவது முண்டோ ?
விடுதலைப் போர்ப் படைதிரட்டி முன்னால் - நின்று
வீரவுரை தந்ததலை வர்க்குள்
சுடுநெருப்பாய் மூண்டெழுந்த ஐயர் - அந்தச்
சுடர் விளக்கின் புகழ்பாட வந்தேன்!

வெள்ளையரைக் கொள்ளையரைத் தமது சொந்த
வேட்டாலும். ஏட்டாலும் அதிரவைத்த
வெள்ளையரே’ வ, வே. சு ஐயர்; நாட்டு
வீரப்போர்க் காவியத்தின் நெருப்பெ ழுத்து
வெள்ளிநரை சாமிநாதையர், ஏட்டு
விடுதலைக்குப் பாடுபட்ட ஐயர் ; பொங்கும்
விடுதலைக்குப் பாடுபட்ட வீர ஐயர்

திருவரக ‘னேரி’யிலே பிறந்து, வீரச்
செந்நெருப்புக் ‘கட்’லாக வாழ்ந்து பின்னர்
‘அருவி’யிலே ஆயுளினை முடித்துக் கொண்ட
ஆச்சரிய வர‘லாறு’ கண்ட வீரர்
குருவிகளும் காக்கைக்ளும் தமது சொந்தக்
கூடுகளில் விடுதலையாய் வாழும் போது
துருப்பிடித்த வாளாகி எனது நாடு

தூங்குவதோ உறைக்குள்ளே என்ற ஏந்தல்