பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

விடுதலை வீரர்கள் ஐவர்


புதுவீரம் புதுப்பெருமை ! புதுவாழ் வென்று
புவிப்புலவர் கவிப்புலவர் பாரதியார்
பதித்திட்டார் மதித்திட்டார் தமது ஏட்டில்!
பாரிலுள்ள அறிஞரெல்லாம் போற்றி னார்கள்!

ஆட்சித் தரப்பினில் அதிகக் கொதிப்பு!
காட்சி புரிந்தது ! கலவரம் சூழ்ந்தது!
வஞ்சகம், சூது வளர்ந்தன; ஆள்வோர்
நெஞ்சை இழந்தனர், நஞ்சை உமிழ்ந்தனர்
கட்டணக் குறைப்பு கப்பலில் செல்ல!
மட்ட நடைமுறைத் திட்டம் வகுத்தனர்
இலவச மாகவும் கப்பலில் சென்று
உவவலாம் என்று ஊரை அழைத்தனர்;
விழித்த மக்கள் வீழ்ச்சி அடைவரா?
பலித்திட வில்லை பரங்கியர் திட்டம்!
விடுதலை ஏக்கம் வீறுகொண் டெழுந்தது!
கெடுதலை மாய்க்கும் மறச்சிந்தை முளைத்தது!

விலைமதிக்க முடியாத வ. உ. சியை
விலைபேசி முடிப்பதற்குத் திட்ட மிட்டுப்
பலஆயி ரங்கொடுக்க நெருங்கி வந்தார்
பளிச்சென்று சிதம்பரனார் முகத்தில் விட்டார்!
அலைகடலின் ஒளிமுத்தை, மாணிக் கத்தை
அறியாதோர் விலைபேச நினைத்திட்டார்கள்.
தலைகொடுக்கச் சம்மதிக்கும் வீரர்தம்மை
தரமறியார் எவ்வாறு அறியக் கூடும்?

ஊருக்கும் நாட்டுக்கும் உழைக்க வந்த
உண்மையுள்ள சிதம்பரனார், நாட்டை மீட்கும்
போருக்கும் தயாரானார்; நாட்டில் அக்கப்
போர்புரிந்த மாற்றாரைப் போர் புரிந்து