பக்கம்:விடையவன் விடைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 3.

தால் அந்த நகர உச்சரிப்புத் தெரியும். இதை மலையாளிகள் சாதாரணமாகவே உச்சரிக்கிரு.ர்கள். றன்னகரத்தை உச்சரிக்கும்போது தாக்கின் நுனி, மேல் வாயைத் தொடும். கன்று என்னும்போது இது தெளிவாகத் தெரியும்.

8. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகும் என்கிருர் என் நண்பர். எனின் ஐயப்பாடு, ஒழிuவில்லை; தேளிவுபடுத்துங்கள்.

வராத கடிதம் என்பதில் ஈறு கெடாத எதிர்மறைப் பெயரெச்சம் வந்தது. அங்கே வல்லினம் மிகவில்லை. வராத என்பது ஈறு கெட்டு, வரா என்று வந்தால், வராக் கடிதம் என்றுதான் வரும். இங்கே வல்லினம் மிக்கது. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன், கசதப மிகும் என்ற பொது விதியின்படி இப்புணர்ச்சி அமைந்தது. -

9. விண் + அத்து + கொட்கும் = விண்வத்துக் கொட்கும் என்று வருவதற்கு இலக்கணம் யாது?

அங்கே தோன்றிய வகரம் எழுத்துப் பேறு.

10. ஈர், ஒர், பேர் (பெரிய) போன்றவை எவ்விடத்தில் வரவேண்டும்? - -

வருமொழியில் உயிரெழுத்து.முதலாக இருந்தால் இவை

வரும். ஓர் என்பது உயிர்மெய் வரும்போதும் சிறுபான்மை

வருவதுண்டு. - -

11. இடைக்குறைக்கும் தொகுத்தல் விகாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடடை விளக்குக.

ஒரு சொல்லின் இடையில் உள்ள எழுத்துக் குறைதல் இடைக் குறை. தனிச்சொல்லில் நிகழ்வது இது. புணர்ச்சியில் குறைவது தொகுத்தல் விகாரம். உம்மை முதலியன தொகுதலும் தொகுத்தல் விகாரம். எலாம் என்பது இடைக்குறை. ல் என்ற மெய்யெழுத்து இடையில்