பக்கம்:விடையவன் விடைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 விடையவன் விடைகள்

குறைந்தது. செல்கெனச் சென்ருன் என்பதில் செல்க என என்பது செல்கென ஆயிற்று; அகரம் தொக்கது. அது தொகுத்தல் விகாரம்.

12. இன்சொல் விளகிலளு?’ என்ற செய்யுளில் அன்பு நீர், அறக்கதிர் என்ற தொடர்கள் வருகின்றன. அவை இருபெயரொட்டுப் பண்புத் தொகையா?

அன்பை நீராகவும் அறத்தைக் கதிராகவும் உருவகம் செய்துள்ள அந்தச் செய்யுளில் அவ்விரு தொடரும் முறையே அன்பாகிய நீர், அறமாகிய கதிர் என்று விரியும். ஆதலின் அவை இருபெயரொட்டுப் பண்புத் தொகைகளே,

13, 'உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன்' என்ற பெரிய புராணப் பாடலில், 'மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்' என்று வரும் கடைசி அடியிலுள்ள மலர் சிலம்படி என்பதற்கு இலக்கணம் என்ன?

'மலர் சிலம்படி என்பது மலர்கின்ற சிலம்பையுடைய திருவடி என்று பொருள்படும் தொடர்மொழி. இது மூன்று சொல், இரு சந்தியுடையது. மலர் அடி, சிலம்படி என்று கூட்டவேண்டும். மலர் அடி என்பது வினைத் தொகை; சிலம்படி என்பது இரண்டாம் . வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்க தொகை, மகாவித்துவான் திரிசிரபுரம் மீளுட்சிந்தரம் பிள்ளை யவர்கள் உலகெலாம் மலர் கிலம்படி என்று கூட்டிப் பொருள் உரைப்பர். . . . . . . .

14. வலி.மிகுதல் என்ருல் என்ன? வல்லெழுத்து மிகுதற்கு உள்ள விதிகள் யாவை? -

வல்லின எழுத்து மிகுதலை வலி மிகுதல் என்பார்கள். ஆடிப்பெருக்கு என்ற தொடரில் ஆடி என்ற சொல்லும் பெருக்கு என்ற சொல்லும் சேரும்போது ப் என்ற வல்லின எழுத்து மிக்கது. இதற்கு விதி விரிவானது. இலக்கண நூலில் காணலாம். -