பக்கம்:விடையவன் விடைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 5.

15. நோற்கிற்பவர் என்பதை எவ்வாறு பிரிக்க வேண்டும்?

நோல் - கில் - ப் - அ ஆர் என்று பிரிக்கவேண்டும். கில் என்பது ஆற்றலைக் காட்டும் சொல். நோற்கும் ஆற்றலை உடையவர் என்பது பொருள்.

16, புலுதம் எனபது எதைக் குறிக்கும்? அளபெடையைக் குறிக்கும் வடமொழிச் சொல் அது.

17. மாத்திரை என்ற எழுத்தின் அளவுக்குரிய தமிழ்ப் பெயர் என்ன?

அளபு என்பது மாத்திரையைக் குறிக்கும் தமிழ்ச் சொல்.

18. வேண்டா என்ற சொல்லின் இறுதியில் ம் விகுதி. சேர்ந்தது எப்படி என்று கூறமுடியுமா?

புதியன புகுதல் என்பதல்ை வேண்டாம் என்று வழங்குகிறது. -

19. சட சட என மரம் முறிந்தது' என்ற வாக்கியத்தில் வரும் சட சட' என்பது இரட்டைக் கிளவியா? இரட்டைக் கிளவி என்பது என்ன?

- 'சடசட' என்பது ஒலிக்குறிப்புச்சொல்; இரட்டைக் கிளவி அன்று. வெடுவெடுத்தான், பரபரப்பு என்பன போன்றவை இரட்டைக்கிளவிகள். பெரும்பாலும் அவற். றைத் தனியே பிரித்துச் சொன்னல் பொருள் இராது.

20. பதினென்று உம்மைத் தொகை பதிற்றென்று:

பண்புத்தொகை-எவ்வாறு? ஏன்? -

r பதினென்று என்பது பத்தும். ஒன்றும் சேர்ந்த எண்ணக் (11) குறிக்கிறது. ஆகையால் அது உம்மைத்

தொகை. பதிற்ருென்று என்பது பத்தாகிய ஒன்று என்று