பக்கம்:விடையவன் விடைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம்

24. தொகையும்மை, முற்றும்மை-இரண்டுக்குமுள்ள வேறு பாடு யாது? அழுக்கா றவாவெகுளி இன்னுச்சொல் நான்கும், இழுக்கா வியன்ற தறம்' என்பதில் கான்கும் என்ற சொல்லில் வரும் உம்மை என்ன உம்மை ?

தொகையும்மை என்பது ஒன்று இல்லை. உம்மைத் தொகைதான் உண்டு; உம்மை மறைந்திருப்பது. இரவு பகல் என்னும்போது இரவும் பகலும் என்று விரியாமல் இருப்ப தால் அது உம்மைத்தொகை. முற்றும்மை என்பது முழுமை யும் என்பதைக் குறிக்க வருவது. முருகன் முகமாறும் காட்டினன் என்ருல் ஆறுமுகங்களுக்கு மேல் இல்லை என்று தெரிய வரும். மேலே உள்ள திருக்குறளில் வருவது முற் றும்மை.

25. தமிழில் ஏழு எழுத்துக்களுக்குமேல் வரும் சொற்கள் இல்லை என்கிருர்களே, இது சரியா ? சிலப்பதிகாரம் என்பதில் எட்டு எழுத்துக்கள் வருகின்றனவே!

பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் எழுத்தீ, ருகத் தொடரும் என்ப' என்பது நன்னூல் சூத்திரம், பகாப்பதம் ஏழு எழுத்து வரையிலும், பகுபதம் ஒன்பது வரையிலும் அமையும் என்பது இதன். பொருள். ஆகவே, ஒன்பது எழுத் துக்களையுடைய சொற்களும் உண்டு, உத்தரட்டாதியான் என்பது ஒன்பது எழுத்துக்களையுடையது, ஒன்பதுக்கு மேலும் வரும் சொற்கள் உண்டு. வினையின் பகுதி வேறு பட்டு வரும் சொற்களில் இந்த மிகுதியைக் காணலாம். சிலப்பதிகாரம் ஒரு சொல் அன்று; இரண்டு சொல் இணைந்த தொடர் மொழி. . . . . . . . . . . "

26. இரட்டைக் கிளவியும் சிலேடையும் ஒன்ரு:

வேறு வேறு. மொடுமொடுத்தன என்பது போல வருபவை இரட்டைக்கிளவி. சிலேடை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருதல். இரட்டுற மொழிதல் என்னும் உத்தி சிலேடை வகையில் ஒன்று. ਾਂ