பக்கம்:விடையவன் விடைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விடையவன் விடைகள்

27. அஞ்சு என்ற கிளவி மரூஉ மொழியா ? மொழிப் போலியா ? .

மொழிப் போலி என்ற ஒன்று இல்லை. அது மரூஉ மொழிதான்.

28. ஊருணி என்பது காரணப் பெயரா? அல்லது ஆகுபெயரா ? -

ஊரால் உண்ணப் பெறுவது என்ற பொருள் தருதலின் காரணப் பெயர். - .

29. ஊறுகாய் என்பது வினைத்தொகையா? காரணப் பெயரா ? .

இரண்டுந்தாம்; ஊறுகின்ற காரணத்தால் வந்த தொடர் அது. காலம் கரந்த பெயரெச்சத் தொடராக இருப்பதால் வினைத்தொகை. -

30. பொற்ருெடி வந்தாள் தழுவு தொடரா? தழாத் தொடரா? பலமொழியும் தொக்க தொகையாய் வருவதைத் தழுவு தொடர் வரிசையில் சேர்த்தது எவ்வாறு பொருந்தும் ?

பொற்ருெடி வந்தாள் என்ற தொடரில் மூன்று சொற்கள் இரண்டு சந்திகள் வந்தன. பொற்ருெடி என்பது பொன்னலான தொடி என்பது, மூன்ரும் வேற்றுமைத் தொகை. அது பொன்னலான தொடியை அணிந்த பெண்ணைக் குறிப்பதனால் அன்மொழித் தொகையாயிற்று. பொற்ருெடி வந்தாள் என்பது எழுவாய்த் தொடர். பொற்ருெடி என்பது சொற்கள் இடையிலே தொக்கு வந்தாலும் பொருளால் தொடர்புடையதாகலின் தழுவு. தொடரே, . . . . . . . . - .

31. வேல்பட் டழிந்தது வேல்யும் சூானும் வெற்பும் என்ற கந்தரலங்காரப் பாடலில் பன்மை எழுவாய்க்கு