பக்கம்:விடையவன் விடைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இலக்கண இலக்கியம்

ஒருமைப் பயனிலை வருகிறது; இதற்கு என்ன சமாதானம்:

தொகுதி யொருமை என்று கொள்ளவேண்டும்.

32. புறக்காழனவே புல்லென மொழிப, அகக்கா ழனவே மரமென மொழிப' என்ற சூர்திரத்தின்படி பார்த்தால் வாழை, பனை இவற்றை மரம் என்று வழங்குவது தவரு? ‘. .

பழங்காலத்தில் அப்படி ஒரு வரையறை இருந்திருக்க வேண்டும். இப்போது புதியன புகுதலால் அது மாறி எல்லாவற்றையும் மரமென்றே சொல்கிருேம்.

33. கைக்கிளே என்பதன் ബു விளக்குக.

கை என்ருல் பக்கம் என்று பொருள்; ஒரு பக்கம் மட்டும் காதல் தோன்றினல் அதைக் கைக்கிளை என்பர். ஒரு மருங்கு பற்றியகேண்மை, ஒருதலைக் காமம் என்றும் அதைக் கூறுவர். ஆண் மட்டும் காதல் கொண்டால் அதை ஆண்பால் கைக்கிளை என்றும், பெண்மட்டும் கொண்டால் பெண்பால் கைக்கிளை என்றும் சொல்வர்.

34. மடல் ஊர்தல் என்ருல் என்ன?

ஒரு கட்டிளங் காளை ஒரு பெண்ணின்மேல் காதல் கொண்டபோது தன் காதல் நிறைவேரு விடில் பனமடலால் குதிரையைப் போல ஒன்றைக் கட்டி அதில் காதலியின் படத்தையும் தன் படத்தையும் பலரும் பார்க்க வைத்து. அதில் ஊர்ந்து சான்ருேர் கான வீதியில் போதலை மட லூர்தல் என்பார்கள். ஆண்களே மடலூர்வார்கள். பெண் கள் மடலூர்வதாகச் சொல்வார்கள்; ஊர மாட்டார்க்ள். திருமங்கை மன்னன் அருளிய பெரிய திருமடல், சிறிய திரு மடல்,காளமேகப்புலவர் பாடிய சித்திரமடல், பிறபுலவர்கள் பாடிய வருண குலாதித்தன்மடல், நரசிங்கராயன் வளமடல் முதலியன மடல் என்ற பிரபந்த வகையைச் சேர்ந்தவை.