பக்கம்:விடையவன் விடைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to விடையவன் விடைகள்

35. சிறு பொழுது பெரும் பொழுது எ ன் ப ைவ ursosii? .

ஒரு நாளின் கூறுபாடுகளைச் :சிறுபொழுதென்றும் ஓராண்டில் இரண்டிரண்டு மாதங்கள் சேர்ந்த இருதுக் களைப் பெரும்பொழுதென்றும் சொல்வார்கள் வைகறை, காலை, நண்பகல், அந்தி, மாலை, யாமம் என்பன சிறு பொழுதுகள், சிறுபொழுது ஐந்து என்று சொல்லும் கொள்கையினரும் உண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பன பெரும் பொழுதுகள்.

36, #ಒT மயக்கம் என்றல் என்ன?

. மயக்கம் என்பதற்குக் கலப்பு. என்று பொருள். ஒரு தினக்குரிய செடி கொடி விலங்கு முதலியவை வேறு திணையிலும் கலந்திருப்பதாகப் பாடுவது திணை மயக்கம். -

37. குறிஞ்சி மலரைப்பற்றி விளக்குக.

ஐந்து வகை நிலங்களில் ஒன்ருகிய குறிஞ்சி நிலத்துக் குரிய பூ அது. அந்த மலரால்தான் நிலத்துக்கே பேர் வந்தது. அது நீல நிறமுடையது. நீல மலர் மிகுதியாக மலருவதால் நீலகிரி என்ற பெயர் ஒருமலைத்தொடருக்கு வந்தது. குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வதும்

38. கந்தழி என்பது என்ன

பற்றற்று நிற்கும் பொருள், என்பது சொற்பொருள். சந்து பற்றுக்கோடு, அது அழிந்தது கந்தழி, கடவுள் வாழ்த்து வகையில் ஒன்ருகக் கந்தழியைக் கூறுகிறது தொல்காப்பியம். - - - - - - -