பக்கம்:விடையவன் விடைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 25

91. காசு, பிறப்பு என்னும் அணிகலன்கள் கழுத்தில் அணியப்படுவனவா ? பல்காசு கிரைத்த சில்காழ் அல்குல்' என்னும் திருமுருகாற்றுப்படை அடியால் காசு என்பது அரை யில் கட்டியது என்று புலகைவில்லையா ?

காசு என்பது அச்சுத்தாலி என்றும் பிறப்பு என்பது ஆமைத்தாலி என்றும் உரை எழுதியிருக்கிருர்கள். தாலி என்பது மார்பில் .ெ தாங் கு ம் அணிகலனைக் குறிப்பது. ஆகவே அவ்விரண்டும் கழுத்தில் அணிவன என்றே கொள்ள வேண்டும். காசு என்பதற்கு மணி என்றும் பொருள் உண்டு. பல்காசு நிரைத்த சில்காழ்' என்பது பல மணி களைக் கோத்த சில வடங்களையுடைய மேகலையைக் குறிப்பது.

92. திருப்பதி எ ன் ற .ெ சா ல் லி ன் பொருள் வேண்டும்.

பதி என்பது ஊர். தெய்வம் உறையும் ஊரைத் திருப் பதி என்பர். பொதுவாக எல்லாத் தெய்வத் தலங்களுக் கும் அமைந்த அப்பெயர் சிறப்பாகத் திருமால் திருத்தலங் களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நூற்றெட்டுத் திவ்ய தேசங்களைக் குறிக்க வழங்குகிறது. அதனினும் சிறப்பாகத் திருவேங்கடத்தைத் திருப்பதி என்று மக்கள் வழங்குகின்றனர். -

93. ஜன்னல் என்பது தமிழ்ச் சொல்லா? இல்லையெனில் எம் மொழியிலிருந்து வந்தது? அதற்கு ஏற்ற தூய தமிழ்ச் சொல் யாது ? - - - >ー

ஜன்னல் என்பது ஜேனெல்லா (Janella) என்ற போர்த் - துக்கீசியச் சொல்லிலிருந்து வந்தது. சாளரம் என்று வழக்கில் உள்ள சொல் வடமொழித்திரிபு. காலதர் ஏன்பது தூய தமிழ்ச்சொல். . . . . ." - --

விடை-3