பக்கம்:விடையவன் விடைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விடையவன் விடைகள்

94. வைசுரோணன் என்பவன் யார் ? அவ னு க் கு ம் இராவணனுக்கும் என்ன உறவு?

வைசிரவணன் என்பதே வைசுரோணன் என்று திரிந்து வழங்கும். வைசிரவணன் குபேரன். விசிரவசு என்பவருக்குக் கேகசி என்பவளிடம் பிறந்தவன் குபேரன். இராவணனும் விசுரவசுவின் புதல்வன். ஆகவே அவ்விருவரும் சகோ தரர்கள். - -

95. கேடும் ஆக்கமும் கெட்ட திருவிஞர்' (பெரிய, புராணம்), கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் (ஒளவையார்) என்பவற்றில் வரும் கேடு என்னும் சொல்லின் பொருள் என்ன ?

முதலில் உள்ள கேடு என்பதற்கு இழப்பு அல்லது நஷ்டம் என்பது பொருள். கேடுகெட்ட என்பது மிகக் கெட்ட என்ற பொருளில் வரும் வழக்குத் தொடர்.

96. கோவணம், கோவன ஆடை - இரண்டுக்கும் வேறுபாடு உண்டோ : . -

கெளdனம் என்று சொல்லும் சிறு துணியே கோவணம். அரைஞாண் கயிற்றில் மறைக்க வேண்டிய உறுப்பை மறைத்துக் கட்டுவது இது. கோவண ஆடை என்பது கச்சமாகக் கட்டும் ஆடை .

91. செய்யுள், கவிதை, பாடல்-இம் மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? . * . . . . . .

மூன்றும் ஒரே பொருளில் வதங்குவதுண்டு. செய்யப்

படுவதால் செய்யுளென்றும், பாடப்படுவதால் பாடல் என் றும் வழங்கும். கவிதா என்ற வடசொல் கவிதை என்று தமிழில் வழங்குகிறது.

98. திருச்சிராப்பள்ளி என்பதில் சிரா என்ருல் என்ன ? எதைக் குறிக்கிறது? . . . . . . . . . . . . . ."