பக்கம்:விடையவன் விடைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 27

சிரப்பள்ளி என்பதே சிராப்பள்ளி என மாறியது. திரு என்பது அடை. திரிசிராப்பள்ளி என்றும் சொல்வதுண்டு. திரிசிரஸ் என்ற அசுரன் உலாவிய இடம் என்று புராண வரலாறு கூறும். .

99. தெலுங்கு என்பது எதிலிருந்து வந்தது:

திரிலிங்கம் என்பதிலிருந்து வந்தது. .

100. தமிழிலிருந்து ஆங்கில வழக்கில் புகுந்த சொற்கள்

உண்டா ? .

அரிசி, மாங்காய், இஞ்சி, வெற்றிலே என்பன ரைஸ், மேங்கோ, ஜிஞ்சர், பீடல் என்று மாறி வழங்குகின்றன. தட்டி, கட்டுமரம், பந்தல் என்பன அப்படியே வழங்கு கின்றன. இவற்றைப்போன்ற பல சொற்கள் ஆங்கிலத்தில் ஏறியுள்ளன.

101. வெற்றிலை என்பது வெற்றியைக் காட்டும் இலை என்ற காரணத்தில்ை வந்தது என்று ஒருவர் சொல்கிருர், அது srfluum ? . . r

வெறுமை, இலை என்ற இரண்டு சொற்களும் இணைந்து வந்த பெயர் அது. வெற்றிலைக் கொடியில் இலையையன்றிப் பூ, காய், கனி ஏதும் இல்லை; வெறும் இலை மாத்திரமே இருக்கிறது. அதல்ை வெற்றிலை என்று பெயர் வந்தது.

102. வீடுகளில் அடிக்கடி மூலைகளிலும் மேற்புறங் களிலும் கறுப்பாகப் படருகிறதே, ஒட்டடை, அந்தச் சொல் எப்படி வந்தது? .

ஓரிடத்தில் ஒட்டிமேன்மேலும் அடுத்து அமைந்ததல்ை ஒட்டடை என்ற பெயர் வந்தது. ... .

103. யானைக்கு நால்வாய் என்ற பெயர் இருக்கிறதே அதற்கு நான்கு வாய் உண்டா?