பக்கம்:விடையவன் விடைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடையவன் விடைகள்

நாலுதல் என்பது தொங்குதல் என்பதைக் குறிக்கும். யானையின் வாயின் அடிப் பகுதி தொங்கிக் கொண்டிருப்பு. தால் நால்வாய் என்று பெயர் வந்தது.

104. ரேழி, தாவாரம்-இவற்றின் பொருள் என்ன ?

வீட்டின் உட் பகுதிக்கும் வாயிலுக்கும் இடையிலே செல்லும் வழியாக இருப்பது இடைகழி; அதுவே ரேழி என்று வழக்கில் சிதைந்தது. வீட்டின் பக்கத்தில் தாழ்வாகச் சார்ப்புடன் கூடிய பகுதிக்குத் தாழ்வாரம் என்று பெயர். அதுவே தாவாரம் ஆயிற்று.

105. லாஹித்யம், கிருதி, கீர்த்தன, பாடல் ஆகிய சொற்களின் பொருள் என்ன ? -

ஸாஹித்யம் என்பது இலக்கியம் என்னும் பொருளுடை. யது. சங்கீத வித்துவான்கள் இசைப் பாட்டுக்குரிய பெயராக் இப்போது வழங்குகிருர்கள். கிருதி என்பது செய்யுள் என்பதுபோல இயற்றப்பட்டது என்னும் பொருளுடையது. கீர்த்தனம் என்பதே கீர்த்தனே ஆயிற்று. அதற்குப் புகழ் அல்லது துதி என்பது பொருள். இறைவனைப் புகழ்வதால் கீர்த்தனை ஆயிற்று. கிருதி, கீர்த்தனை என்ற இரண்டும் இப்போது பல்லவி, அநுபல்லவி, சரணங்களுடன் உள்ள இசைப்பாடல்களுக்குப்பெயர்களாக வழங்குகின்றன. பாடல் என்பது எல்லா வகையான செய்யுட்கும் இசைப்பாட்டுக்

- * ...:

கும் பொதுவானது.

106. முடங்கல், மடல், கடிதம், விகிதம்-இவற்றின் வேறுபாடுகள் யாவை ? -- . . .

எல்லாம் இப்போது கடிதத்தைக் குறிக்க வழங்கும் சொற்களே. இவை உண்டானதற்குக் காரணங்கள் வேறு. பழைய காலத்தில் ஒலேகளை எழுதிச் சுருட்டி அனுப்பு வார்கள். அதல்ை முடங்கல் என்ற பெயர் வந்தது. முடங்கல்-சுருளுதல், பனமரத்தின் ஒலைக்கு மடல் என்று