பக்கம்:விடையவன் விடைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 29

பெயர். அதில் எழுதியதல்ை மடல் என்ற பெயர் உண்டா யிற்று. கடிதம் என்பது காகிதத்துக்குப் பெயர். காகிதத்தில் எழுதுவதால் அப்பெயர் வந்தது. லிகிதம் என்பது எழுதப் படுவது என்ற பொருளுடையது.

107. இலஞ்சம் என்பதற்குரிய தமிழ்ச் சொல் யாது ?

கைக்கூலி, கையூட்டு என்ற இரண்டு சொற்களைச் சொல் லலாம்.

108. ருைந்தும் கிழிந்தும் போன ஆடையைப் பீத்தல் என் கிருேம்; அது எம்மொழியிலிருந்து வந்தது ?

பீற்றல் என்பதே பீத்தல் எனச் சிதைந்து வழங்கு கிறது. பீறு என்பதிலிருந்து வந்தது அது. பீறு என்பதற்குக் கிழி என்று பொருள். எனவே கிழிந்த துணியைப் பீற்றல் என்று சொல்கிருேம்.

- 109. அனேக, அநேக, நன்ள்ை. அங் நாட்களில், பொன்னுள் - இவற்றில் ன, ந எழுத்துக்கள் வேறுபடுகின் றனவே, அவை சரியா? ஏன்?

அநேகம் என்பது வடசொல். அதை இருவகையாகவும் எழுதலாம். நன்னாள் என்பது நன்மை, நாள் என்று இரண்டு சொற்க்ள் சேர்ந்து அமைந்த தொகை, புணர்ச்சி விதியால் தந்நகரம் றன்னகரமாக மாறியது. பொன் நாள் என்ற இரண்டும் சேர்ந்தபோதும் அப்படியே ஆயிற்று, அந்நாள் என்பதில் அ என்ற சுட்டின்முன் நாள் என்பது வந்து நகரம் மிக்கது. -

110. நீர் என்ற சொல் வடமொழியிலும் இருக்கிறதே. அது தமிழ்ச் சொல்தான P - : '

நீரம் என்பது வடசொல். அது தமிழிலிருந்து சென் றதே. மீன், தாமரை போன்ற சொற்கள் தமிழிலிருந்து