பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 1or என்னைக் குளிர்பூஞ் சோலையென நினைக்கிறார்கள். அங்கு ஏன் போகிறாய்? இந்தச் சர்வாதிகாரிசுட என். காலடியில் அல்லவா! பட்டினி கிடந்துகிடந்து செத்த, எனக்குத் தானா சாவ பயம்; இல்லை ரொதோல்போ இல்லை-நான் என் வாழ்விலே இன்பம் கண்டதே கிடையாது. சிறுவயதிலிருந்து இன்றுள்ள செல்வப் பெருக்கில்கூட எனக்குத் துளிகூட மகிழ்ச்சி ஏற்பட்ட தில்லை. என்ன செய்வது? என் வாழ்க்கை, நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பெரிய இடத்துப் பெண்களாக இருந்தால் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள். அவர்கள் அழுதால் ஆறுதல் கூறுவார்கள். கெடுதல் செய்தால் மன்னிப்பார்கள். எங்களுக்கு யாவும் நல்லதுதான். துன்பம் தருவார்கள். இன்பமாகப் பேசி ஏய்ப்பார்கள். நாங்கள் யாரிடத். திலே போய் முறையிடுவது? முறையிட்டால் கேட்பவ ருண்டா? துன்பப்பட பிறந்து விட்டபோது துன்பப் பட்டுத்தானே ஆகவேண்டும். மற்றவர்கள் உண்டால் பசி நீங்குமா? மற்றவர்கள் இன்பமட்ைய ஆடுகிறோம். பாடுகிறோம். அதனால் நாங்கள் இன்பமடைய முடியுமா? ரொதோல்போ-நீயே சிந்தித்துப்பார். என் நிலைமைக்கு என்னைக் காதலிக்கிற ஒரு இதயம் எனக்குத் தேவையல்லவா? காதல் இல்லையென்றால் என் வாழ்வு எப்படியாவ்து உன் உள்ளத்தைக் கவர வேண்டும் என்பதற்காக நான் இப்படிக் கூறுவதாய். நினைக்காதே. இனி அதனால் என்ன பயன்? இனி ஒன்றும் நடக்கப் போவதில்லை என். சாவுக்குப் பிறகு எந்த அளவில் திஸ்ப் நம்மைக் காதலித்தாள் என்பது நீ உணர்வாய். இந்த ஆறு மாதங்களாய் உன் பார்வையே. எனக்கு உண்வு உன் முறுவலே எனக்கு இன்பம். உன் மூச்சே என் உயிர் - அப்படித்தான் அவை இருந்தன. இந்த ஆறு மாதங்களாய் என்னைப் பற்றி ஒரு வினாடிகூட நினைத்ததில்லை என் உயிராகிய நீ-எப்பொழுது