பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ என்னை இறுக அணைத்து தீஸ்ப் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லுவாயோ என்றுதான் ஏங்கிக் கிடந்தேன். ஏதேதோ நினைத்துச் சங்கடப் பட்டேன். எப்படி உன் மனதை மாற்றுவதென்று எண்ணாதனவெல்லாம் எண்ணினேன்-அது உன்மேல் தவறில்லை. நீ என்னசெய்வாய்? உன் எண்ணம் ஏழாண்டுகளுக்கு முன்பு கத்தேரினாவினால் சிறை செய்யப்பட்டதென்பதை இப்பொழுதுதான் உணர்ந் தேன். இதற்காக நான் உன்னை வெறுக்கவில்லை. உன் துன்பம் நிறைந்த உன் வாழ்விற்கு ஏதோ விளையாட்டாகக் காலப்போக்காக நான் இருந்தேன் என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தேன். அதற் காகக் கவலைபடவில்லை உன்னை நிந்திக்கவும் இல்லை. நான் என்ன செய்வது. நீ இன்றேல் இனி என்னால் வாழமுடியாது - உன்ன்ால் தான் நான் உயிர்க்கிறேன். நடமாடுகிறேன். பேசுகிறேன் - பாடு .கிறேன் - ஆடுகிறேன் - இதோ பார்த்தாயா, நான் சொல்வதைக் கூட கேட்கமாட்டேன் என்கிறாயே என் பேச்சு அவ்வளவு வெறுப்பாகவா இருக்கிறது. இந்த நிலையில் வேறு ஒரு மரமூஞ்சு பார்த்தாலும்கூட என்மீது மனமிரங்குமே. அவ்வளவு பாவியா நான். ரொதோல் நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன். அதில் எனக்குச் சிறிதுகூட ஐயமில்லை. வாளெடுத்துவர சர்வாதிகாரி ஓடினபோது நீ - என் கண்ணை - என் காதலியை நஞ்சருந்தச் சொல்லிக் கட்டாயப்படுத்த வில்ல்ையா? நான் இனி எதையும் கேட்க முடியாது. கத்தேரினா எங்கே? கொன்று விட்டீர்களா? அல்லது நஞ்சு கொடுத் தீர்களா? எங்கே அவள் ஊம் எங்கே? விரைவாகச் சொல். என் வாழ்வின் உயிர்நாடி அவள். அவளேதான் வேறு இந்த உலகத்தில் எவரும் இல்லை. - - -