பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 109 திஸ்ப் அவள்! அவளேதான்! வேறு யாருமில்லையா? ஐய்யோ என்னால் இந்தச் சொற்களைக் கேட்க முடியவில்லை. இந்தக் குத்துவாளால் என்னைக் கொன்றுவிடேன். ஏன் இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லிக் கொல்கிறாய். (அவன் வைத்திருக்கிற். குத்துவாளைக் காட்டி) இதால் தீர்த்துவிடேன். ரொதோல் : எங்கே அவள்? என் உயிர் - என் உடல் என் காதல்...எங்கே அவள்? - திஸ்ப் உனக்குச் சிறிதுகூட மனம் இளகவில்லை, ஈவு இரக்க மற்றவன் நீ!. என் இதயத்தைப் பிளக்கிறாய். சரி-நான் சொல்வதைக் கேள். உனக்குத்தப்ன் சொன்னதெல்லாம் உண்மைதான், ஆம் நான் அவளுக்கு நஞ்சு கொடுத்துத்தான் கொன்றேன். என் காதலுக்கு - என் வாழ்வுக்குத் தடைக்கல்லாக இருந்த அவளைக் கொன்றுவிட்டேன். . ரொதோல் : நீயா இப்படிச் சொல்கிறாய். கடவுளே! கொன்றதுமல்லாமல் அதைப் பெருமையாகக்கூடச் சொல்லுகிறாயா? - திஸ்ப் : ஆம் நான்தான் செய்தேன், என் காதல் வழிக்குக் குறுக்கே நின்ற கற்சுவரை இடித்துத் தூளாக்கினேன் - நீ கொல், ஊம் கொல். - ரொதோல் : வஞ்சகி. . (குத்துவாளாள் குத்துகிறான்.) - திஸ்ப் : (கீழே விழுகிறாள்) ஆ..இதயத்தில்-இதயத்தில் குத்தினாய்...மகிழ்ச்சி! நல்ல வேலை செய்தாய். அன்பே ரொதோல்போ-உன் கைகள்-உன்கை. (அந்தக் கையைப் பிடித்து முத்தமிட்டு). நன்றி. என்னை இப்பொழுதுதான் காப்பாற்றினாய். விடு உன் கையை என்னிடம் விடு. நான் உனக்கொரு கெடு தலும் செய்யமாட்டேன். என் அன்பு-ஆசை-உயிர் உடல்மூச்சு யாவும் நீயல்லவா. என் வாழ்நாளில் இன்று தான் நான் இன்பம் காண்கிறேன். போகட்டும். நான் இனிப் பிழைக்கமாட்டேன்.