பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ என்னிடம் அனுப்பி இருக்கிறார். அது மட்டுல்ல. அவர் எனக்கு ஒரு பரிகப்பொருளும் கடிதத்தோடு அனுப்பி இருக்கிறார். ஆன்ழெல் : என்ன! என்ன அது: தீஸ்ப் வேனிஸ் நகரத்துப் பொருள். ஒரு சிறிய வெண்சீஷாவும், மற்றொரு சிறிய கருஞ்சீஷாவும் கொண்ட ஒரு பெட்டி. அந்த சீஷாவில் உள்ளது. மயக்கமருந்து. அதை உண்டவர்கள் பனிரெண்டு மணிநேரம் பிணம் போலக்கிடப்பார்கள். மற்றொன்று. கொடிய நஞ்சு. மற்றபடி அந்த ஆள் ஒமோதேய் ஒரு முண்டம், சோம்பேறி, ஒரே இடத்தில் நிலைத்து நிற்காதவன். நீங்களும்தானே பார்க்கிறீர்கள். வந்து பதினைந்து நாள் ஆகிறது - சாப்பிடுவதும் தனக்கு விருப்பமான இடத்தில் எங்காவது படுத்து உறங்குவது மாக இருக்கிறானே ஒழிய, ஏதாவது சிறிதாவது சுறுசுறுப்போ கவலையோ அவனுக்கு இருக்கிறதா பார்த் தீர்களா? வேனிசுக்குப் போக நினைத்துக் கொண்டால் போவான். நினைத்துக்கொண்டால் திரும்பி வந்துவிடுவான். என் தாய்கூட இவனைப் போலத்தான் இருந்தாள். இங்கே விழா நடக்கிறது. அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான், பார்த்திர்களா? ஆன்ழெல் அவனைப்பற்றி 盘 ப்ொறுப்பேற்றுக் கொள்கிறாயா? தீஸ்ப் : போங்கள் எப்பொழுதும் இந்த அச்சந்தான். விழா நாட்களில்கூடவா? இப்படி அஞ்சி, அஞ்சிச்சாவது? அதிலும் அவன் ஒரு கித்தார் இசைக்கும் ஏழை, முண்டம், துங்குமூஞ்சி, அவனைக் கண்டா, இப்படி அலறுவது? எப்பொழுது பார்த்தா லும் அவனைப்பற்றி, இவனைப்பற்றி, அதைப்பற்றி,