பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ தார்கள்-போகட்டும். என் நிலையை-என் பெயரை யெல்லாம் தெரிந்து கொண்டாயல்லவா. நான் உனக்கு இவையெல்லாம் மறைத்துத்தான் வைத்தேன்-அதற். காகக் கோபித்துக் கொள்ள மாட்டாயே - இதைப் போல நீ அடிக்கடி வர முடியுமா. ரொதோல் ஆம். வருவேன். அந்த மனிதன் எனக்கு உதவி செய்வான். இல்லையென்றால் என்னால் வாழ. முடியாது. நீ ஒன்றுக்கும் பயப்படாதே.-நீ- என்னைக் காதவிக்கிறாய், நான் என் உயிராக உன்னைக் காதலிக்கிறேன். கடவுளுக்கு இது தெரியும். நம்மை அவர் கைவிடமாட்டார். நீ நான் கடவுள் இந்த மூவரைத்தவிர வேறு யாரும் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கவில்லை. கவலைப்படாதே. கத்தேரினா : கவலையாடப்ஊ-இந்த இன்பநேரத்தில் கவலை எப்படி வரும் நான் உனக்கு-நீ எனக்கு. ரொதோல் : என் இன்பக் கடலே! கத்தேரினா இரு சற்றுப் பொறு. நான் நன்றாக உன்னை என் கண்குளிரப் பார்க்கவிடு காதலிக்கும் பொருளைக் கண்குளிரப் பார்ப்பது தான் இன்பம். அந்த வாய்ப்பு எப்பொழுதும் கிட்டாது. என் கண்கள் ஆசை திருமட்டும் உன்னை அள்ளி விழுங்கட்டும். ஆம். நான் இப்பொழுதுதான் கொடுத்து வைத்தவள். பாக்கியசாலி. •. : (அவன் அவள் கையை முத்தமிடுகிறான். அவள் மேஜை மீதிருந்த கடிதத்தைத் பார்க்கிறாள்). அது என்ன ஏதோ கடிதம் போல் தோன்றுகிறதே நீயா அந்தக் கடிதத்தை வைத்தாய்? . . ரொதோல் : இல்லை ஒருக்கால் என்னை அழைத்து வந்த அந்த மனிதன் வைத்திருக்கலாம்.