பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<66 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ எடுத்து வந்தேன். இங்குதான் எங்கோ வைத்து விட்டேன். - - ஆன்ழெல் இதுபோன்ற மனிதர்கள் நினைத்தபோ தெல்லாம் என் கோட்டையில் நுழைகிறார்கள். என் வாழ்க்கையைப் பார்த்தாயா? வாழ்க்கை சர்வாதி காரி வாழ்க்கை. அரச வாழ்க்கை - எப்பொழுதும் என்னை வீழ்த்த வலை விரிக்கப்படுகிறது. திஸ்ப் நேரமாகிவிட்டது, மற்றவை gravaurrLb நாளைக்குப் பேசிக்கொள்ளலாம், நீங்கள் போய் படுங்கள். உயிர் தப்பித்தது - அது போதும் எனக்கும், ராணிக்கும் நீங்கள் மிகக் கடமைப்பட்டவர்கள். ஆன்ழெல் : ஆம் கண்ணே, என் உயிரைமீட்ட உனக்குத் தான் முதலில்... - திஸ்ப் என் வண்டி எனக்காக காத்திருக்கிறது. சற்று அதுவரையில் வருகிறீர்களா? ராணி துரங்கட்டும். ஆன்ழெல் : சரி-போவோம். என் அறைக்குச் சென்று போவோம். என் உடை வாளை எடுத்துக்கொண்டு போவோம். (அறையினுள் நுழைந்து) யாரங்கே விளக்குகளை ஏற்றுங்கள். திஸ்ப் : (கத்தேரினாவை அரங்கின் ஒரத்தில் அழைத்து வந்து) இதோ சாவி-நான் வந்த வழி-அவனை உடனே தப்பித்து ஓடச் செய்யுங்கள். - (பூஜை அறைப் பக்கம் திரும்பி) அவன்தானா என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே! ஆன்ழெல் : (திரும்பி வந்து) சரி! போவோமா! - இஸ்ப் அவனைப் பார்க்கக்கூடுமானால்! வழியில்லை போகவேண்டியதுதான். ஊம்... (ஆன்ழெல்லோ பக்கம் திரும்பி) - - -