பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 95> உங்கள் வாய் ஒட்டை. நான் ஒன்றும் சொல்ல. மாட்டேன். இங்கு இந்த அறையில் ஒரு பெண் சாகப் போகிறாள். ஆனால் நீங்களல்ல. நான் சொல்வதைக் கேளுங்கள். மறுக்கவேண்டாம், நஞ்சைக் குடியுங்கள்' கத்தேரினா : சரி உங்கள் விருப்பம்போல் ஆகட்டும். அப்படியே செய்கிறேன். அதோ அவர் திரும்பிவருகிற ஓசை கேட்கிறது. (அறைப்பக்கம் திஸ்ப் ஒடுகிறாள். கதவு திறக்கிறது.) . திஸ்ப் : அரசே! வேண்டாம்! வாள்வேண்டாம் தனியே வாருங்கள். தனியே வாருங்கள்! (வேலையாட்கள் வாளை எடுத்துக் கொண்டு வந்து பக்கத்து அறையில் நிற்கிறார்கள். ஆன்ழெல்லோ வருகிறார்.) - களம்-10 கத்தேரினா-தீஸ்ப்-ஆன்ழெல்லோ - தீஸ்ப் : அரசே! ராணி நஞ்சு அருந்த உடன்பட்டு: விட்டார்கள். - - ஆன்ழெல் : (கத்தேரின்ாவைப் பார்த்து) ஊம். உடனே ஆகட்டும். . கத்தேரினா : (நஞ்சு சீசாவை எடுத்துக்கொண்டு தீஸ்பைப் பார்த்து.) நீங்கள் என் கணவரின் ஆசைநாயகி என்பது எனக்குத் தெரியும். உங்கள் உள் எண்ணமென்ன-மறைவான நோக்கமென்ன. என்பதெல்லாம் விளங்காமலா இருக்கிறது. என்னைக் கொன்றுவிட்டு-என் கணவனை - சர்வாதிகாரியைமன்னனை உன் கைவசப்படுத்திக் கொண்டு ராணி. யாகப் பார்க்கிறாய். சீ. நீயும் ஒரு பெண்ணா. பலருக்கு உடலை விற்ற பேய்க்கு நல்லெண்ணம் உண்டாகுமா? இப்படி இருபத்திரண்டு வயதில்