பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விட்டு சித்தன் விரித்த தமிழ் இங்கு படி..உடம்பு; இச்சொல் இங்குத் தலைமுறையைக் காட்டுகின்றது. எங்களுடைய சந்ததியில் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதை உணர்த்த வழிவழி என்கின் ஹார். - கான்காவது பாசுரத்தில் ஆன்மாநுபவத்தை விரும்பி யிருக்கும் கைவல்யார்த்திகளை மங்களாசாசனம் செய்க. வரும்படி அழைக்கின்றார். ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந் தெங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடை வீர்கள்! வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ காடும் நகரமும் கன்கறி - யநமோ நாராய னாயவென்று பாடும் மனமுடைப் பத்தருள் வீர்! வந்து பல்லாண்டு கூறுமினே. (4) fஏடுநிலம் . பொல்லாத இடமாகிய கை:ைல்யம்; இடுவது-தள்ளுவது; வரம்பு-ஆன்மா நுபவ வரம்பு: ஒழி வந்து - ஒழித்து; ஒல்லை - விரைவாக என்பது பாசுரம். மூன்றாவது பாசுரத்தில் கூழாட்பட்ட வர்களை விலக்கினாப்போலே இவர்களையும் வில்க்க வேண்டியிருந்தாலும், இ வ. ர் க ள் கைவல்யமாகின்ற சொந்தப் பலன் பெறுவதற்காகிலும் எம்பெருமானைச் சரணமடைந்தவர்களே என்ற மகிழ்ச்சிப் பெருக்கால் அவர்களையும் அழைத்து முறையான உபதேசங்களால் திருத்தலாம் என்ற நினைப்பால் அழைக்கின்றார் என்பதை அறிதல் வேண்டும். இந்தக் கைவல்யார்த்திகனைப் போலே ஐசுவர்யார்த்திகளும் சொந்தநலன் கருதுபவர்களாயிருக்க, அந்த ஐசுவர்யார்த்திகளை முதலில் அழைப்பதைத் தவிர்த்து கைவல்யார்த்திகளை முதலில் கூப்பிட்டது ஏன்? என்னில்; ஐசுவர்யார்த்திகளைச் சாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்; கைவல்யார்த்திகளை அங்கனம்