பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் 27. சாவகாசமாகத் திருத்திக்கொள்ள இயலாது. ஏனென் நால், கைவல்யார்த்திகளின் உபாயா நுட்டானம் முடிந்துள் விட்டால் அவர்கள் ஆன்மாநுபவத்திற்காக ஏற்பட்ட மேலோகத்தில் போய்ச் சேர்ந்து விடுவார்கள்; மீண்டும். அங்கிருந்து ஒரு நாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே இப்போதே அவர்களைத் திருத்திக் கொள்ளாமல் தாமதம் செய்தாலும் அந்த அதிகாரிகள் பாழாய்ப் போவார்களே!’ எ ன் கி ன் ற அதுதாபத்தினால் ஐசுவர்யார்த்திகளுக்கு முன்னே கைவல்யார்த்திகட்கு முதலில் அழைப்பு விடுக்கின் றார் என்பதை அறிதல் வேண்டும். - ஏடு நிலம் : பொல்லாத இடம் என்பது சொதி பொருள். சந்தர்ப்பபலத்தால் இது கைவல்ய இடம் என்று: பொருள்படும். அன்றியும், ஏடு-சூக்கும சரீரமானது, நிலத்தில் . தனக்குக் காரணமான மூலப் பிரகிருதியில், இடுவதன் முன்னம் - சென்று சேர்வதற்கு மூன்னே என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விடத்தில் ஒரு முக்கிங், மான கருத்தை மனத்தில் இருத்துதல் வேண்டும், உடம்பு (சரீரம்), நுண்ணுடம்பு (சூட்சுமசரீரம்) பருவுடம்பு (தூல. சரீரம்) என இருவகைப்படும். பஞ்சபூதங்களின் சூக்கும அவத்தைகளாகிய தந்மாத்திரைகள் ஐந்தும், கருமேந்திரி பங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், மனசு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய உடம்பு துண்ணு உம்பு எனப்படும். தந்மாத்திரைகளின் துலங்களான பூதங்களோடு சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், பிரகிருதி, மகாந், அகங்காரம் . ஆகிய 24 தத்துவங்களுடன் கூடிய உடல் துால சரீரம் (பருஉடம்பு) எனப்படும். ஆன்மா தனது நுண்ணுடம்பு விரஜை நதியில் தீர்த்தமாடுவதால் நீங்கிய பிறகுதான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்; இவ்விரண்டில் எதை அடைந்தாலும் திரும்பி வருதல் இல்லை. இந்த இருவகையான உடம்புகளுள் துண்ணுடம்பு பரு உடம்பைக்காட்டிலும் பிரதானமாய் அதனுடைய சாரமுமாய் இருப்பதால் பாலின் ஏடு போலும்