பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்ற காரணம் பற்றி ஏடு என்பது குக்கும் உடம்பைக் காட்டும். வரம்பு என்பது அவரவர்கள் ஏற்படுத்திக்கொண்ட எல்லை. ஆன்மாதுபவத்தோடு நாம் நின்றுவிடவேண் டியது. பகவானை அநுபவிக்கப் போகக்கூடாது. என்று கைவல்யார்த்திகள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்து விட்டுத் தம்முடன் வந்துசேருமாறு அழைக்கின்றார். ஆழ்வார். கைவல்ய நிஷ்டர்கள் தங்கள் கோரிக்கை நிறை வேறுவதற்காகப் பிரணவத்தை மட்டிலும் நாவால் தவிற்றுவர்; இனி, அப்படியல்லாமல் நாராயணாய என்ப தையும் சேர்த்து எட்டெழுத்து மந்திரத்தையும் நவிற்றிக் கொண்டு வரவேண்டும் என்பதை நாடு நகரமும்... பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே என்ற பின்னி ரண்டு அடிகளால் அவர்களை அழைகின்றார். + ஏழாம் பாசுரத்தில் கைவல்யார்த்திகள் திருந்தின் படியைச் சொல்லுகின்றார். நாலாம் பாசுரத்தில் நாடு நகரமும் நன்கறிய என்று அவர்களுடைய நன்மையை எல்லோரும் தெரிந்து கொள்ளுமாறு அவர்கள் வரவேண்டும் என்று அறுதியிட்டு, 'சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்து கொள்வது நல்ல உபாயம்’ என்று அதைச் செய்து கொண்டு குடும்பத்துடன் மங்களாசாசனம் செய்பவர் களாக ஆய்விட்டதைக் கூறிக்கொண்டு வந்தார்கன் என்பதை அருளிச்செய்கின்றார். - w தீயின் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு . கின்று குடிகுடியாட்செய்கின்றோம். (7) நிதியின்-சந்திரன் சூரியன் அக்கினி முதலிய சுடர்ப் பொருள்கள் எல்லாவற்றையும்விட, பொலிதல். பிரகாசித்தல்; செஞ்சுடர்.சிவந்த ஒளி: ساتنه-اشيني