பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} விட்டு சித்தன் விரித்த தமிழ் பகுத்துக் கொண்டு பொருள் காணவேண்டும். அண்டங் களுக்கு அதிபதியாயிருக்கை ஐசுவரியத்துக்கு முடிவெல்லை யாயிருப்பதால், புதிய ஐசுவர்யத்தைப் பெற விரும்புகின்ற அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபத்தியத்தைப் பெற விரும்பி அந்த விருப்பம் வெளிப்படும்படி அண்டாதிபதியே. தம!’ என்று எப்போதும் உருப்போடுபவர்கள்; அந்த அதிகாரிகளை அழைக்கின்றார் என்பது முதல் விளியால் தெளிவாகும். ஏற்கெனவே இருக்கின்ற செல்வத்தை அசுரர்.இராக்கதர்கள் போன்ற எதிரிகள் அபகரித்துக் கொண்டதனால் மீண்டும் அச்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர்கள் அவ்விருப்பம் வெளிப்படும்படி க.அசுர சத்துருவே நம: என்று உருப்போடுபவர்கள்; அந்த அதிகாரிகளை அழைக்கின்றார் என்பது இரண்டாவது விளியால் விளங்கும். ஆக, இப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து, கஐயகோ, நீங்கள் சொந்த நலன்களைக் கருதி எம்பெரு மானின் ஆயிரம் திருநாமங்களையும் வாயாரச் சொல்லி மகிழ்வடையலாம். அப் படி யி ரு க் க, அதைவிட்டு *அண்டாதிபதி, அசுர சத்துரு என்றஇரண்டு திருநாமங் களை மட்டும் அற்ப பலனுக்கு உருப்போட்டுக் கொண்டுள் வீர்களே; இது தகாது; இனி ஆயிரம் திருநாமங்களையும் பயன் கருதாது அநுசந்தித்து எங்களுடைய் குழுவில் சேர்ந்து மங்களாசாசனம் பண்ண வாருங்கள் -என்று அழைக் கின்றார் என்பதை அறிந்து தெளிதல் வேண்டும். அண்டம்-உலக உருண்டை. இஃது அளவற்றதாகை வால் அண்டக்குலம்’ எனப்பட்டது. இதற்கு அதிபதி என்று எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடிய தாகும்; உன்னைப் போலவே, நாங்களும் அண்டாதிபதி யாகவேண்டும்" என்று தெரிவித்துக் கொண்டபடி. இண்டைக்குலம்-நெருக்கமான கூட்டம்; அசுரர் இராக்க தர்களாகின்ற சண்டாளருடைய கூட்டத்தைக் குறித்தபடி.