பக்கம்:விதியின் நாயகி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 குளித்து முழுகிச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டாள்-தன் சினேகிதி ஒருத்தியைப் பார்த்து வர. மேத்தியானம் போன பெண்; பொழுது அணைந்து விட்டதே, இன்னும் வீட்டுக்கு வர ஞாபகம் இருக்காதோ?-- என்ற குற்றச்சாட்டை மனத்தில் நெளிய விட்டு ஆசையுடன் மகளின் வரவுக்காக வாசலுக்கும் வெளிக்குமாக கல்யாணி நடந்து கொண்டிருந்தாள். ஆனந்தம் கொழிக்க நின்ற அப்பொழுதுதான் அந்த அதிர்ச்சி அவளை மோதிற்று. கைத் நொடிப் பொழுதுதான் என்ருலும் அதற்குத்தான் எவ்வளவு சக்தி: அவள் முன் உலகம் ஆலவட்டம் சுற்றியது. கைப்பிடிப்பில் கிடந்தது அந்தப் புத்தகம். மறுபடியும் கண்கள் பிரிந்துகிடந்த முதல் ஏட்டில் இழைந்தன. நீர்த் திரையிட்டது. அவள் வாசித்தாள்: 'அன்புள்ள கல்யா வணிக்கு, அன்பளிப்பு-நாகராஜன்’ என்று ஓடியது வாசகம். தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது தாகூரின் அந்த நூல், அவள் புத்தக இதழ்களை துணிவிரலால் கோதி விட்டாள். ஏதோ ஒன்று தரையில் விழுந்தது. எடுத்தாள்: பிரித்தாள். அது ஒரு கடிதம். வாசிக்கலானுள் கல்யாணி. 'அன்புள்ள தனிகு, நீ ஊருக்குப் போனதும் என்னை மறந்துவிடாமலிருக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இத்துடன் என் போட் டோவையும் இணைத்துள்ளேன். மறந்துவிடாமல் எனக்கு லெட்டர் போடு. உன்னைக் காண விரைவில் திருச்சிக்கு வருகிறேன். - அன்புள்ள, சேகரன்??. நெஞ்சில் பரபரப்பு ஊறியது: கல்யாணிக்கு கடிதத்தில் குறித்திருந்த போட்டோ ஞாபகம் வந்தது. உதறினள் புத்தகத்தை அதில் குறிப்பிட்டபடி எந்தப் போட்டோவும்