பக்கம்:விதியின் நாயகி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சேகரன் என்ற பெயர் காணப்பட்டது. அந்தப் புகைப்பட உருவத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். தன் அத்தான் நாகராஜனின் அசல் ஜாடையை அவள் இந்தப் படத்தில் பார்த்தாள். தன் அத்தானின் மகன்தான் சேகரன்’ என்று முடிவு செய்தாள் அவள். உண்மையும் அதுதானே...? புதையுண்ட கடந்த காலக் கனவுகளை எண்ணினுள் கல்யாணி, திடுதிடுப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் அறுந்துவிட்ட தனக்கும் தன் அத்தான் நாகராஜனுக்குமுள்ள பாசத்தை எண்ணினுள். மின்ஞமல் முழங்கிவிட்ட இடி தன் வாழ்வை நீறுபூத்த நெருப்பாக்கிவிட்டதை அவள் மறப்பது எப்படி? வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்த கதையாகத் தன்னைக் கைவிட்ட தன் அத்தா னின் வஞ்சனை அவளை நெருப்பாகச் சுட்டுவிட, அந்நிகழ்ச்சி அவள் நெஞ்சத்தில் அணையாத் தீயாகப் புகைந்து வருவதை அவள் எப்படிக் கட்டுப்படுத்துவாள்? துவளும் கொடி வெய்யிலில் வாடி வதங்குவதுபோல, நளின ஆளுள். - 'அம்மா, நானே உன்னிடம் சொல்ல வேண்டுமென்றி ருந்தேன். என்னை மாப்பிள்ளை யாரும் வந்து பார்த்து என் கல்யாணத்தை செட்டில் பண்ண வேண்டிய ஜோலியே இல்லை. நானே எனக்குரியவரை வரித்து விட்டேன். நமக்கும் நெருங்கிய உறவினர். பெயர் சேகரன். அவர் கூட இன்று, நாளை வருகிரு.ர். அவர் யார் தெரியுமா? உன் அத்தான் நாகராஜனுடைய ஏகபுதல்வன். இழந்து விட்ட நம் குடும் பங்கள் இணைந்து வாழ வேண்டுமென்பதே சேகரனின் தந்தையின் ஆசையாம். இதைப் பல முறை சொல்லியிருக் கிருராம். அம்மா, எங்கள் ஒன்ருன உள்ளங்களைப் பிரித்து விடாதே....” என்று நளின சொல்லும் போதே குறுக் கிட்டாள் கல்யாணி.