பக்கம்:விதியின் நாயகி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சும்மா இருங்க வந்ததும் வராததுமாய் இப்பிடியா?” பிடி கொடுத்து, பிடி விலகி, தரையில் நழுவிய துணிப் பொட்டலத்தை எடுத்தாள் பவளக்கொடி. . . ஃபலே! ரொம்ப ஷோக்கா இருக்கே இந்தப் பட்டுச் சோளி! எனக்குத் தானுங்களே, அத்தான்?’ என்று கொஞ்சிள்ை: 'மறுகா யாருக்காம்! உனக்கே தான்! அறந்தாங்கிக்குப் போக வேண்டி வந்திச்சு, கத்தரி சாணை பிடிக்க, போன இடத்திலே இந்தத் துணி கண்ணிலே தட்டுப் பட்டுச்சு. நீ ஒரு வாட்டி சொன்னது நினைப்பு வந்திச்சு. இருபதும் சொச்சத்துக்கு எடுத்தாந்தேன். ஒரே மூச்சிலே தச்சுப் புட்டேன். தச்சு, சூட்டோடவே உங்கிட்டே கொண்டாந்து போட்டு அழகு பார்க்கணும்னு ஆசை ஒடிச்சு ஒடியாத் தேன்!?-எச்சில் ஒழுகப் பேசினன் சின்னமுத்து. . " உருகிப்போளுள் பவளம். பேவளம், அந்த ரவிக்கையைக் கழற்றி வீசிப்புட்டு இதைப் போட்டுக்குவேன்!’ என்று நையம் பாடினன். ரோத்திரிக்கு ஆகட்டுமுங்க. இப்ப போட்டுக்கினு கசங்கிப் போயிடும். போய், பிழைப்பைப் பாருங்க, என்று சொல்விக் கொண்டே, புதுச் சோளியை வாகாய் மடித்து டிரங்குப் பெட்டிக்குள் வைத்தாள் கட்டழகி. வீசின. கையும் வெறுங்கையுமாகக் கடைக்குத் திரும்பி ஆளுன் சின்னமுத்து சிங்கம். இப்போதும் தெய்வானை அவன் நெஞ்சில் நிறைந்தாள்: பொடியனே அவன் வீட்டுக்கு அனுப்பினன். தெய்வான பஜனை செய்து கொண்டே, இரண்டாவது காட்சி ஆரம்பிக்கும் நேரத்துக்காகத் தவம் கிடக்கலானுன் அவன். . . . .x. இரண்டாம் ஆட்டம் ஆரம்பம்ாகி விட்டது. இன்னமும் தெய்வானைப் பெண்ணைக் காளுேமே?...