பக்கம்:விதியின் நாயகி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多多3 அட, கடவுனே! கடையை அடைத்து மூடிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் சின்னமுத்து! அந்தப் பழிகாரி தெய்வானைக் குட்டி சோளி வாங்க வரும். சோளி, வீட்டிலே இருக்குன்னு: சொல்லிக் கையோட அழைச்சுக்கிட்டுப் போய், வழியிலே சவுக்குத் தோப்பிலே நிலாவிலே மடக்கிப் போட்டுப் புடலாம்னு ஆசையாய்த் தவிச்சுக்கிட்டு இருந்தேனே?... ஐயையோ’-நெஞ்சு புலம்பாமல் இருக்குமா? 'வாங்க மச்சான்,வாங்க!” என்று பாடி, முகமன் மொழிந்தாள் பவளக்கொடி.

  • மூஞ்சி என்னமோ போல இருக்குதுங்களே? மூஞ்சி யைக் கழுவிக்கினு வாங்க, அத்தான்! சாப்பிடலாம்: எருல் வருத்திருக்கேன்!’ ஒ

சோப்பாடு அப்பாலே ஆகட்டும், பவளம், முதலிலே அந்தப் பட்டுச் சோளியைப் போட்டுக் காட்டு: அேதைப் போட்டுப் பார்த்துப்புட்டேன். ரொம்பக் கச்சிதமாய் இருக்குங்க, அத்தான். அளவு ரவிக்கை இல்லாமல், எப்பிடிங்க இம்மாம் பொருத்தமாய் தச்சீங்க??? 'ஆளைப் பார்த்தாப் புரியாதா, பவளம்?... அது போகட்டும். அந்தச் சோளியை எடுத்துக்கிட்டு வா!’ பவளக்கொடி சிரித்தாள்: வாய் விட்டுச் சிரித்தாள். 'என்னத்துக்கு இப்பிடிச் சிரிக்கிறே? முதலிலே அந்தச் சோளியை எடுத்திட்டு வாயேன்; அதை உனக்குப் போட்டு அழகு பார்த்தால்தான் எனக்குப் பசி எடுக்குமாக்கும்!” என்ருன் சின்னமுத்து. பவளக்கொடி மறு முறையும் எக்காளச் சிரிப்பைக் கக்கிளுள்: 'அத்தான், அந்தப் பட்டுச் சோளி, போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திடுச்சுங்க?” என்ருள்.