பக்கம்:விதியின் நாயகி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

  • ஐயோ!...அத்தான்!??

அலறிக் கதறினுள் அகிலாண்டம். .ே அப்பா!...அப்பா !” கமலாட்சி துடித்தாள்; குமார் புரண்டான்: அகிலாண்டம் வைத்த கண் வாங்காமல் டாக்டரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  • ஆண்டவனே!...என் தாலியைக் காப்பாற்றித்தா!...” என்று அகிலாண்டத்தின் உள்மனம் வேண்டியது.

ரத்தத் திவலைகளுக்கு மத்தியில் கிடந்த ராமலிங்கம் கண்களை மூடி மூடித் திறந்தார். அவரது உதடுகள், 'மாப்பிள்ளே...மாப்பிள்ளே!...” என்று முணுமுணுத்தன. என் புருஷன் பிழைச்சிட்டாங்க! - அகிலாண்டம் தன் கணவரை அண்டினள்.

  • ஐயோ அப்பா...அம்மா...என்ன ஏமாத்திட்டால் களே என் அத்தான்!...” என்று கூக்குரல் எழுப்பிளுள் கமலாட்சி. .

சித்தம் பேதலித்தவளைப் போன்று. விழித்தான் அகிலாண்டம். நான் பாவி!...” என்று கதறிக் கதறி, தன் மர்ர்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள் அவள்! நித்திய நிருத்தியக் கூத்தின் நியதிக் கோட்டுக்குள்ளே அகப்பட்டு, ஆனல் சுயநலம்-பாசம் ஆகிய தளைகட்கு அகப் படாமல், தன் போக்கில்-தன் இஷ்டத்தில்-தன் லயிப்பில் இயங்கிக் கொண்டுதான் இருந்தது அந்தப் புண்ணிய பூமி: | g-4 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/17&oldid=476427" இலிருந்து மீள்விக்கப்பட்டது