பக்கம்:விதியின் நாயகி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 கொண்டுக்கிட்டு தெய்வானை வந்தப்ப, கேணியடியிலே துணியைக் காட்டி பொன்னம்மாகிட்டே சொல்லி விம் மிச்சு அது. தன் மச்சான்கார ரோட கடைசி ஆசையை நிறை. வேற்றி வைக்கத் துடியாய்த் துடிச்சுது. நானே வந்து உங்ககிட்டே சிபாரிசு செஞ்சு, அந்தச் சோளியை சல்தி யாய்த் தச்சுக் கொடுத்திடுங்க- அப்படின்னு கெஞ்ச நினைச் சிருந்தேன். அதுக்குள்ளே நீங்களே அதைத் தச்சு எடுத்து வந்தீங்க; ஒரு நாடகமும் போட்டீங்க... பாவம், தெய்வானே! அதோட கொண்டவன் ஆசை இந்நேரம் நிறைஞ்சிருக்கும்! தெய்வானேயோடமச்சான் இனி பிழைக் கிறது சந்தேகம்தாளும் தாலி அறுத்திட்டால், அவங்க குடும்ப வளமையிலே ரவிக்கையே போடறதில்லையாமே?” பவளக்கொடி கண்ணிரை விலக்கி விட்டாள். *அத்தான், இத்தாங்க தையல்கூலி ரெண்டு ரூபா என்று சொல்லிப் பணத்தை நீட்டினள். சின்னமுத்துவின் கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன. . *சொந்தம் வேறே தொழில் வேறே. நீங்க கூலி ஒரு ரூபாய்தான் கேட்டீங்களாம். நான் பட்டு கட் சோளிக்கு ரெண்டு ரூபாய் கூவின்னு சொல்லி, கூலியை வாங்கி னேனுங்க!’ - தையற்காரச் சின்னமுத்து சில ஆளுன். அண்ணுச்சி: என்று அன்று குரல் கொடுத்த அந்தத் தெய்வானையின் அந்த அன்பின் அழைப்பு அவனுடைய மனிதத் தன்மையின் மனச் சாட்சியிலே எதிரொலித்திருக்குமோ?-ஐயையோ, தெய் வானப் பொண்னே?-அவன் விம்மிக் கொண்டிருந்தான்!