பக்கம்:விதியின் நாயகி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 வைத்துவிட்டுப் போய்விட்டான்?... ராஸ்கல்! - அவரு டைய பற்கள் நறநற*வென்று ஒசை செய்தன. பத்தடி தொலைவில் என்னைப் பார்த்தால்கூட, மட்டு மரியாதை யோடு அஞ்சியொடுங்கி நடந்து வந்த கிராம முன்சீஃப் மகன் கிட்டுவா என் மகள் மஞ்சுவைக் கடத்திக்கொண்டு கண் காணுமல் ஓடிவிட்டான்? - ராஸ்கல்!??- அவர் வாய் விட்டுச் சீறிஞர். குற்றவாளிகள் இருவர். ஒருவன்: கிட்டு. ஒருத்தி: மஞ்சுனன். குற்றவாளிகள் இருவரில், கிட்டுவை மட்டும்தான் ராமா மிருதம் நிந்தித்தாரா, என்ன? ஊஹாம்! என் மகள் மஞ்சு, பாவி!... கிட்டு கூப்பிட்டான் என்ருலும் கூட, மானம் உள்ள பெண்ணுக இருந்திருந்தால், எப்படி அவளுேடு ஒட மனம் துணிவாள்?’ என்று ஆயிரம் முறை கதறிக் கதறி அழவில்லையா? - இந்த ஏப்ரலில் கோடை விடுமுறையோடு ஹெட் மாஸ்டர் ராமாமிருதத்தின் பதவிக் காலம் சரி. அப்புறம், அவர் ரிடையர் ஆகிவிடுவார். . . ." அன்று, ஒட்டமாக ஓடி வந்தான் கிட்டு: ஸார்...ஸார்: நீங்க ரிடையர் ஆகப் போறேளாமே! ஸார், உங்களையும் அம்மாவையும் மஞ்சுவையும் தினம் ஆயிரம் வாட்டி பார்த் துண்டிருந்த நான், உங்களையெல்லாம் பிரிஞ்சு எப்படி ஸார் இனி இருக்கப் போறேன்?’ என்று உருகிக் கரைந்தான்.

  • நான் ரிடையர் ஆனல் என்னப்பா, கிட்டு? பூவை மாநகரிலேயிருந்து தஞ்சாவூர் ஒன்றும் அதிக தூரம் இல்லை யேப்பா! நீ நினைக்கிறப்போ வந்து எங்களையெல்லாம் பார்த் திட்டுப் போயேன்!” என்று அவர் ஆறுதல் சொன்னர்.

பூ-15