பக்கம்:விதியின் நாயகி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கோழி கூப்பிட் நீ வந்தே இல்லியாடா?’ என்து விசாரணை செய்தார். .

  • இல்லீங்க, கோழி கூப்பிடாமலே வந்தேனுங்களே: என்ருன் சோம்ையா, கையில் விழிபிதுங்கி வழிந்த தோசை மாவை நோட்டம் பதித்தபடி. - W - ஓ, தமாஷா பண்றியா? பவே பாண்டியா? 'எம் பேரு சோமையனுங்க, அண்ணுச்சி!’ 'ஹி, ஹி' என்று அதிர்வேட்டுச் சிரிப்பை சட்டம் போட்டு அடக்கின மாதிரி அடக்கிவிட்டு, சிறுவன ஏறிட்டு நோக்கினர். 'ஏய், அழுதியாடா தம்பி?’ என்று நெகிழ்ச்சி யுடன் கேட்டார். . -

வெளிறிய உதடுகள் துடிக்க, அந்தத் துடிப்டால் இழை பாவிய அரைச்சிரிப்போடு, ஊகூம், நீங்க இருக்கிறப்ப நான் எதுங்குங்க அழப்போறேன், அண்ணுச்சி?’ என்ருன் சோமையா. X- メ, × - சரக்கு மாஸ்டரின் நெஞ்சை அவன் பதில் தொட்டிருக்க வேண்டும். தம்பி, இவ்வளவு நாழிகைக்கு நீ ரெண்டே ரெண்டு கல்லு மாவுதான் அரைச்சிருக்கிறே! இன்னும் மூணு கல் அரிசிக்கு மிச்சம் இருக்குதேப்பா?...மணி பத்து அடிச்சிச்சோ இல்லையோ, கொண்டா தோசை - வறுத்த கரி அப்படின்னு தலையைச் சுத்திக்கிட்டு வந்திடுவானுகளே வாடிக்கை ஆளுங்க...ம்.ஜல்தியா மாவை ஆட்டி முடி தீ சுறுசுறுப்பா இருந்தால்தான், முதலாளி கல்லாவுக்கு வந்தடியும் உன்னைப்பத்தி நான் ஷட்ராங்கா சிபாரிசு பண்ண முடியுமாக்கும்!” என்ருர் கண்டிப்புக் குரலிலே. பசியை மறந்திட்ட வைராக்கியமும் கடமை உணர்வும் துலங்க, "இதோ, ஒரு நொடியிலே அரைச்சுத் தள்ளிப் பிட்றேனுங்க, அண்ணுச்சி!” என்று சொல்லிக் கொண்டே, ‘கட கட’ வென்று ஆடுகல் குளவியைச் சுற்றத் தெ. விட்டான் அவன். ? :.ز. م- :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/19&oldid=476429" இலிருந்து மீள்விக்கப்பட்டது