பக்கம்:விதியின் நாயகி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அடுப்பங்கரையை மேற்பார்வையிட வந்தபோது, ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சினர். பொடியின் நெடி பொடியனத் தும்மல் போட வைத்து விட்டது. . தேவர் திரும்பிப் பார்த்தார். "முதலாளி, நான் இன்னிக்குக் காலம்பற வேலைக்குச் சேர்த்த புதுப்பொடியன் இவன்தான்!” என்று கூறிஞர் சரக்கு மாஸ்டர், . - '... . . . . . . . . ; 'ஒஹோ?’ என்றபடி, கைகூப்பி வணக்கம் தெரிவித்த அந்தச் சிறுவன ஏற இறங்கப் பார்வையிட்டார் முதலாளி. சிறுவனின் பால்வழியும் முகத்தையும் அந்த முகத்தில் அழகானதோர் ஒளிப்புள்ளியாகத் திகழ்ந்து பொலித்த மச்சத்தையும் ஊடுருவினர். இனம் புரியாத பாசத்தின் நெகிழ்வில் கட்டுண்டவர்போல் ஒரு கணம் மெய்ம்மறந்து தவித்தார் அவர். பிறகு, சுயப்பிரக்ஞையை மீட்டுக் கொண்டு, ஏண்டா, உனக்குச் சொந்த ஊர் எது?’ என்து வினவினுர் தேவர். 'எல்லாமே எனக்குச் சொந்த ஊர்தானுங்க. ஆஞ், இப்போதைக்கு இந்த ஆவணத்தாங் கோட்டைதானுங்க எசமான் எனக்குச் சொந்த ஊர்: . தேவரின் புருவங்கள் மேலேறின. gGDr: என்று புன்னகை செய்தார். ம்...உன் தாய் தகப்பன்? . பிஞ்சு நெஞ்சு தத்தளித்திருக்க வேண்டும். இப் போதைக்கு நீங்கதானுங்க எனக்கு அம்மையப்பன், முதலாளி’ என்று விடை மொழிந்தான். x:. . . . & என்ன?’ என்று அதிர்த்தார். சொந்தக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/21&oldid=476431" இலிருந்து மீள்விக்கப்பட்டது