பக்கம்:விதியின் நாயகி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 'ஒஹோ, அப்படியா?*

  • ம்!...தினம் எழுபத்தஞ்சு காசு கூலி தாரதாகச் சொல்லி ஒரு வாரம் கொடுத்திட்டு வந்தவங்க முந்தாதாள் ஐம்பது காசு போட்டுக் கொடுத்தாங்க. ஏன்னு காரணம் கேட்டதுக்கு, வியாபாரம் டல்’ஆயிடுச்சின்னு சொன்னுங்க. சொன்ன சொல்லைக் காற்றிலே பறக்க விட்டவங்ககிட்டே என் உழைப்பைச் சேதப்படுத்த என்ளுேட மனசு ஒப்பலேங்க. கூலிக் காசைக்கூட வாங்காமல் ஒடியாந்திட்டேன்!’

சி இதய்யாகவா??? 'பொய் பேசப் பழகல்லேங்க உங்க தம்பி!?? மெய்சிலிர்த்தது எனக்கு. கதைக்குக் கரு கொடுக்க வல்ல பேச்சல்லவா அது?-பிஞ்சு நெஞ்சின் நாணயப்பண்பு எனக்கு இதமாக இருந்தது இயல்புதான். ஏழைமையிலும் நேர்மை சிறப்பதென்பது சிலாகிக்கப் படவேண்டிய தல்லவா? - புதிய காலடியோசை கேட்டது. ஏறிட்டு விழித்தேன். யார் அந்த அம்மணி? "ஐயா, எம்மகன் குணசீலன் ரொம்ப கெட்டிங்க. சொன்ன அலுவலக் கச்சிதமாய்ச் செஞ்சுப் புடுவான். தாலும் தப்புச் செய்யமாட்டான். தப்புச் செய்யறவங்கண் யும் சும்மா விடமாட்டான்!...எங்க வயித்திலே வந்து பிறந் திட்டானுங்க! நாங்க ஏழை பாழைங்கதான். இவன் அப்பா ரிக்ஷா ஒட்டிப் பிழைக்கிறவருதான். ஆலுைம் நாங்க மானம் அவமானத்துக்குப் பயந்த ஜென்மங்களாக்கும். எங்க வீட்டுக்காரருக்குக் கள்ளுக்கடைதான் சதம். நானும் என் மகனும் என்ன பாடுபட்டும், அவரைத் திருத்தவே முடியலிங்க. அந்தத் தீவினை எந்த மட்டுக்கும் கொண்டு போகப் போகுதோ? தெரியலிங்க...ஐயா, நீங்க பெரிய மனசுவச்சு எம்மகனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தால், எங்க வயிற்றுப்பாடு சங்கடமில்லாமல் நடக்குமுங்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/47&oldid=476457" இலிருந்து மீள்விக்கப்பட்டது