பக்கம்:விதியின் நாயகி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குணசீலனின் தாய் பேசிளுள். அவளது அழகுக் கண் களிலேதான் எத்துணை நம்பிக்கை!... - நல்ல பிள்ளையைப் பெற்று, நல்ல பிள்ளையாக வளர்த் துள்ள அந்தத் தாயைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும் போலிருந்தது எனக்கு பன்னிரண்டு வயசுச் சிறுவனின் தாயாகத் தோன்றவில்லை. அவள். ஏதோ சின்னஞ்சிறுக போலே, உடற்கட்டு விடாமல், எளிமையான இயல்பான எழில் குலுங்க, சீவிச் சிங்கரித்து நிற்கிருள்!...பையனையும் பையனை ஈன்றவளையும் மாறிமாறிப் பார்வையிட்டேன். பிறகு, அம்மா, கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு வேலை போட்டுக் கொடுக்கிறேன், என்று அந்த அம்மணியை நோக்கிச் சொல்லிவிட்டு, குணசீலன் நின்ற திசைக்குப் பார்வையைத் திசை மடக்கிவிட்டேன். தம்பி, உனக்கு தினம் எவ்வளவு சம்பளம் வேணும்?’ என்று கேட்டேன். "அதை நீங்க முடிவு செய்யுறது தானுங்களே முறை: 'ஓ, அப்படியா?...தினம் ஒரு ரூபாய் போட்டுக் கொடுத் திடறேன். போதுமில்லையா?? X- . போதுமுங்க. போதும் என்கிற மனம் பொன் செய்யும் மருந்து அப்படின்னு படிச்சிருக்கேனுங்க நான்!” என்ருன் குணசீலன். விழிகள் கசிந்தன. . . உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டுங்க ஐயா. நான் புறப்பட்றேன்; போய்ச் சாப்பாட்டுக்கு வழி பண்ண வேணும்!’ - . . . .” அவள் புறப்பட்டாள். . தான் மத்தியானத்திலேருந்து வேலை பார்க்கிறேன், அண்ணுச்சி: : ' ' ' ஜேம்!?? . எகூலி வாங்கிட்டுப் போறப்ப, டீக்கின்னு ஒரு பத்துக் காசு கொடுக்கிறது.வழக்கம் பழைய கம்பெனியிலே...நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/48&oldid=476458" இலிருந்து மீள்விக்கப்பட்டது