பக்கம்:விதியின் நாயகி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அந்தப் பத்துகாசை அப்படியே எங்கம்மாகிட்டே கொண்டு போய்க் கொடுத்திடுவேன். அப்பன்காரர் காக கொடுக்கர மலே, சம்பாதிச்சது பூராவுக்கும் கள்ளைக் குடிச்சிட்டு, சோத்துக்கு வந்து நிற்பார். பசிக்குச் சோறு போடாட்டா, குடி வெறியிலே அம்மாவை அடிச்சுப் போட்டுடும்!...ஆன தாலே, என்ைேட அந்தப் பத்துக்காசு எங்க ஏழைப்பட்ட குடும்பத்துக்கு ரொம்பவும் உதவுமுங்க!’ செவ்வதரங்கள் துடித்தன. நானும் தினக்கூலியோடு டீக்கு பத்துக்காசும் கொடுத் இடுறேனப்பா: குணசீலன் கையெடுத்துக் கும்பிட்டான். அட, கடவுளே! நான் தெய்வமா, என்ன? பசித்தது. பசிக்கு விதி ஏது? எங்கள் பார்ட்னர் தங்கமுத்துவைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் சிபாரிசு செய்ததன் பேரில், வேலைக்குச் சேர்க்கப்பட்ட பொடியன் வேலப்பன் வேலை முடிந்து திரும்பு கையில், தன்னுடைய நிஜார்ப் பையில் இருநூறு கிர்ாம் பேபி மிட்டாய்ப் பாக்கெட்டைத் திருடி வைத்திருந்ததைக் கண்ட குணசீலன், அதைப் பறித்திருக்கின்ருன். உடனே வேலப்பன் தன் குற்றத்தை உணராமல், குணசீலனை அடிக்க எத்தனிக்க, சினம் மூளப்பெற்ற சிறுவன் குணசீலன் குற்றவாளி வேலப்பன நையப்புடைத்துவிட்டானம் சீனி மூட்டைகள் எடுத்து வந்த நான் சேதி அறிந்தேன்: என் நீதிவிசாரணை, பொடியன் வேலப்பனேக் குற்றவாளியாக நிரூபித்தது. குணசீலன் பொய் சொல்லமாட்டான். நான் அறிவேன். உடனேயே, திருடிய மிட்டாயைப் பறித்துக் கொண்டு வேலப்பன வேலையைவிட்டு விலக்கி விட்டேன். பூ.-8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/49&oldid=476459" இலிருந்து மீள்விக்கப்பட்டது